திருவள்ளூர், ஏப். 22 –

தம்பட்டம் செய்திகளுக்காக செந்தியாளர் மாறன் …

கடந்த ஆண்டு நடத்தப்பட்ட குடிமைப் பணிகளுக்கான தேர்வின் இறுதி முடிவு கடந்த ஏப்.16-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதில் ஆவடி சரஸ்வதி நகரை சேர்ந்த புவனேஷ் ராம் ( 27) என்பவர்,  தமிழகத்தில் முதல் மாணவராகவும்,  இந்திய அளவில் 41 -வது இடத்தை பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.

இந்நிலையில்,  திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்திற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில்  புவனேஷ் ராம் மற்றும் அவரது குடும்பத்தினரை ஆட்சியர்  பிரபுசங்கர் வரவழைத்து அவரை பாராட்டி சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

பின்னர் பேசிய புவனேஷ்ராம், அகில இந்திய அளவில் குடிமைப் பணி தேர்வில் 41-வது இடமும்,  தமிழகத்தில் முதல் இடமும் பிடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது எனவும், வருங்காலங்களில் தேர்வு எழுதுபவர்கள் தேர்வை எதிர்கொள்ள கடந்த கால வினாத்தாள்களை படிக்கவும், எந்தவிதமான கேள்விகள் கேட்கப்படுகின்றன அதற்கேற்றவாறு பதிலளிக்கவும். ஒவ்வொரு தேர்வின் போதும் தற்போதைய நிலவரம் குறித்த வினாக்களும் அதிகளவில் கேட்கப்படுகின்றன எனக்கூறிய அவர் அதனால் அன்றாட நிகழ்வுகளை தெரிந்து வைத்திருக்க வேண்டும். எனவும், மேலும் அதேபோல் பயமின்றி தேர்வை அணுக வேண்டும் எனவும் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து டிஎன்பிசி யுபிஎஸ்சி தேர்வு எழுத தமிழக அரசால் பயிற்சி அளிக்கப்படும் மாணவர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் அவர்களின் சந்தேகங்களுக்கும் புவனேஸ்வர் ராவ் பதில் அளித்தார்

 

பேட்டி:

புவனேஸ்வர் ராவ்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here