திருவள்ளூர், ஆக. 15 –

இன்று நாடு முழுவதும் இந்திய திருநாட்டின் 75 வது சுதந்திர தின விழா கொண்ட்டாட்டங்கள் வெகு சிறப்பாக நடைப்பெற்றது. அதில் தமிழ்நாட்டில் தலைமைச்செயலகத்திலும் மற்றும் மாவட்ட தலைமை அலுவலகங்களிலும், அது போன்று தனியார் மற்றும் அரசு சார்ந்த துறைகள், உள்ளாட்சி அமைப்புகள், கல்விநிலையங்கள், சமூக ஆர்வலகள் என்று பாகுபாடுகள் இன்றி அனைவரும் அந்தந்த பகுதிகளில் உள்ள கொடி மரங்களில் தேசியக் கொடியை ஏற்றி அதற்கு மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கியும் மேலும் நடப்பாண்டில் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களும், பரிசுப் பொருட்களும் வழங்கி அவர்களை இந்நாளில் அவர்களின் செயல்பாட்டினை பெருமைப் படுத்தி வருகின்றனர். அதுப் போன்று அரசு சார்பில் எளிய பயனாளிகளுக்கு நலத்திட்டங்களையும் வழங்கி உதவிக்கரம் கொடுத்து இவ்விழாவினை சிறப்பித்து வருகின்றனர்.

அது போன்று இன்று திருவள்ளூர் மாவட்டத்தில், மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைப்பெற்ற இந்திய திருநாட்டின் 75 ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டம் நடைப்பெற்றது. அதில்  மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் அவர்கள் திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஆவடி மாநகராட்சி அலுவலகத்தில் பணியாற்றும் சுகாதார ஆய்வாளர் மற்றும் கூடுதல் பொறுப்பாளர் அப்துல் ஜாபர் அவர்கள் ஊரடங்கு கொரானா காலத்தில் சிறப்பாக பணியாற்றியதற்கும் பல்வேறு கொரோனா விழிப்புணர்வு பாடல்கள் பாடி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திய தற்கும்  மாவட்ட நிர்வாகம் சார்பில் பாராட்டு கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here