வானகரம், ஜூலை. 03 –
அதிமுகவின் இபிஎஸ் அணியினர் ஏற்பாடு செய்து வரும் பொதுக்குழு கூட்டம் வருகின்ற 11ஆம் தேதி வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நடைப்பெறயிருக்கிறது. இதற்கான முன்னெடுப்பு பணிகள் மிக தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. இப்பணியினை முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் தலைமையில் ஸ்ரீவாரு திருமண மண்டபத்திற்கு சொந்தமான காலி மைதானத்தில் அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
இதற்கான ஏற்பாடுகள் கடந்த மூன்று நாட்களாக முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பொதுக்குழு நடக்கக்கூடிய இடத்தில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்,பி. வேலுமணி தங்கமணி, நத்தம் விஸ்வநாதன், விஜயபாஸ்கர், செல்லூர் ராஜு, ஆர்.பி உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், மற்றும் மாவட்ட செயலாளர் அலெக்சாண்டர், பலராமன் மற்றும் இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாநில துணைச் செயலாளர் எஸ் பி ஆர் கிஷோர் உள்ளிட்டோர் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.
உணவு அருந்தக்கூடிய இடம், பொதுக்குழுவை காண்பதற்காக அமைக்கப்பட்டுள்ள அரங்கம் உள்ளிட்ட இடங்களை நேரடியாக ஆய்வு செய்தனர். மேலும் பணியை விரைந்து முடிக்க ஏற்பாடுகள் முழு வீச்சில் செயல்பட வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்த ஆய்விற்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த இபிஎஸ் அணியில் உள்ள முன்னாள் அமைச்சர்கள் வரும் 11ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் எனவும் அப்பொதுக்குழுவில் எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்படுவார் என்றும் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும், 11ஆம் தேதி திட்டமிட்டபடி மகிழ்ச்சியோடும் எழுச்சியோடும் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று தெரிவித்த அவர், சட்ட விதிகளுக்கு உட்பட்டே இப்பொதுக்குழு நடைபெறும் எனவும் மேலும், இந்த பொது குழுவில் கடந்த முறை நிராகரித்த தீர்மானங்களில் ஒரு சில திருமணங்களை தவிர்த்து மற்ற தீர்மானங்கள் இந்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்படும் என்றார். குறிப்பாக ஒற்றை தலைமை பொதுச் செயலாளர் பதவியை உருவாக்கி மறைந்த முதல்வர்கள் எம்ஜிஆர் ஜெயலலிதா காலத்தில் பொதுச்செயலாளருக்கு என்ன அதிகாரம் இருந்ததோ அத்தனையும் உள்ளடக்கி இந்த பொதுச் செயலாளர் பதவி உருவாக்கப்படும் என்றார். தொடர்ந்து இந்த பொதுக்குழுவில் முன்னாள் முதல்வர் பழனிச்சாமி பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கான தீர்மானம் நிறைவேற்றப்படும் இந்த பொதுக்குழு சட்டப்படி நடைபெறும் இந்த பொதுக்குழுவை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது நிறைவேற்றப்படக்கூடிய தீர்மானங்கள் செயல்பாட்டிற்கும் வரும் ஓ பன்னீர்செல்வம் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு நான் தான் ஒருங்கிணைப்பாளர் என்று கூறுகிறார். ஓபிஎஸ் உடன் இருப்பவர்களுக்கு ஒத்த கருத்து இல்லை ஓ பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளர் இல்லை என்பதை வைத்தியலிங்கம் ஒத்துக் கொள்கிறார் எனவும், தற்போது ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் துணை ஒருங்கிணைப்பாளர் பதவி இல்லை என்றும் தற்போது தலைமை கழக நிர்வாகிகள் தான் உள்ளனர் எனவும் தெரிவித்தார். பொதுச் செயலாளர் பதவி வெற்றிடம் ஏற்பட்டால் கட்சியால் உருவாக்கப்பட்ட நிர்வாகிகள் சேர்ந்து பொதுச் செயலாளரை தேர்வு செய்யலாம் 99 சதவீத கழக நிர்வாகிகளும் 99 சதவீத கழக செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்களும் ஒற்றைத் தலைமை பழனிச்சாமி தலைமையில் தான் வேண்டும் என கூறி உள்ளனர். என அச்செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.



















