புதுவாயல், மார்ச். 16 –
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த கவரப்பேட்டை புதுவாயல் பகுதியில் அமைந்துள்ளது. டிஜேஎஸ் கல்லூரி இங்கு திருநங்கைகளுக்கு விஜய கீதம் அறக்கட்டளை தொண்டு நிருவனத்தின் மூலம் கல்வி பயில வாய்ப்புகான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
பென்னோரி. கும்மிடிப் பூண்டி, செங்குன்றம், ஊத்துக்கோட்டை, கவரப் பேட்டை, உள்ளிட்ட பகுதிகளில் உள்ள திருநங்கைகள் தங்களது கல்வியை பாதியில் நிறுத்தியவர்களை அனுகி மீண்டும் அவர்களது திறன் மேம்பாட்டை குறித்து ஆராய்ந்து அவர்களுக்கு ஒரு புது வாழ்வை அமைத்து தருவதற்கானா முயற்சியாக விஜய கீதம் தொண்டு நிறுவனம் கல்லூரியுடன் இனைந்து ஒப்பந்த கையெழுத்து ஆலோசனைகூட்டம் கல்லூரியின் வளாகத்தினுள் நடைபெற்றது.
இந்நிகழ்வில், திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தின் இயக்குனர் கபிலன், தலைமை வகித்தார் .கல்லூரியின் முதல்வர் டாக்டர் .பிரகாஷ், முன்னிலை வகித்தார். நிகழ்ச்சி ஏற்பாட்டினை பயிற்சி மையத்தின் தலைவர் கீதா செய்திருந்தார். இதில் சங்கத்தின் நிறுவனர் ஜீவா. ஒருங்கிணைப்பாளர் பானு. உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர். மேலும், திருவள்ளூர் மாவட்டம் வாரியாக கல்வியில் பின் தங்கிய திருநங்கைகளை அணுகி அவர்களை கல்வியில் உயர்த்துவதற்கான முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்பின் அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கல்லூரி மற்றும் திறன் மேம்பாட்டு நிருவனங்களுக்கிடையே போடப்பட்டது.






















