திருவண்ணாமலை ஜூலை.19- திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கோணலூர் ஊராட்சியில் 2020-21ம் ஆண்டில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.4 லட்சம் மதிப்பில் புதியதாக நாடக மேடை கட்டி முடிக்கப்பட்டது. இதன் திறப்பு விழா ஒன்றியக்குழு தலைவர் அய்யாகண்ணு தலைமையில் நடைபெற்றது. ஆணையாளர் ஆ.சம்பத், வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ.) பி.பி.முருகன் ஆகியோர் முன்னிலை வகிக்க, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் ஆராஞ்சி ஏ.எஸ்.ஆறுமுகம் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி புதியதாக கட்டப்பட்ட நாடக மேடையை திறந்துவைத்தார். இதில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன், தீபா சக்கரபாணி, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஆர்.வாஞ்சிநாதன் உள்பட அரசு அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி மன்ற தலைவர் மு.கணேசன் நன்றி கூறினார்.
முகப்பு மாவட்டம் திருவண்ணாமலை கோணலூர் ஊராட்சியில் ரூ . 4 இலட்சம் மதிப்பிலான நாடக மேடையை துணை சபாநாயகர் திறந்து...