இராமநாதபுரம்; நவ. 16-

ராமநாதபுரத்தில் தேசிய பத்திரிக்கை மற்றும் ஊடக கூட்டமைப்பு ( NATIONAL PRESS & MEDIA FEDERATION ) சார்பில் தேசிய பத்திரிகையாளர் தினம் கொண்டாடப்பட்டது.

 

தேசிய பத்திரிகையாளர் தினம் நிகழ்ச்சியில் ராமநாதபுரம் தமிழ்ச்சங்கம் தலைவர் பேராசிரியர் அப்துல் சலாம் தலைமை வைத்தார். ராமநாதபுரம் மாவட்ட சமூக ஆர்வலர் லியாகத் அலி, காசிம் ராமநாதபுரம் வர்த்தக சங்கம் துணைத் தலைவர் கவிஞர் தஸ்லீம் காஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 தேசிய பத்திரிக்கையாளர் தினத்தில் மூத்த பத்திரிகையாளரும் புலனாய்வு எக்ஸ்பிரஸ் இதழின் பொறுப்பாசிரியருமான சிவசங்கரனை துபாய் தொழிலதிபர் டாக்டர் எஸ் எம் பாரூக் சால்வை அணிவித்து கவுரவித்தார்.

 

NATIONAL PRESS & MEDIA FEDERATION நிறுவனரும் புலனாய்வு எக்ஸ்பிரஸ் இதழின் ஆசிரியருமான தேசிய விருதாளர் டாக்டர் அப்துல் ரசாக் நிகழ்ச்சியில் தேசிய பத்திரிகையாளர் தினம் குறித்து விரிவாகப் பேசினார்.

தேசிய பத்திரிகையாளர் தின நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக துபாயில் இருந்து வருகை தந்த தொழிலதிபர் டாக்டர் எஸ் எம் பாரூக் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பத்திரிகையாளர்களின் அயராத சேவைகள் குறித்தும் நாட்டின் நான்காம் தூணாக செயல்படுவது குறித்தும் பேசினார்.

 

தேசிய பத்திரிக்கையாளர் தின நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற தொழிலதிபர் டாக்டர் எஸ் எம் பாருக் அவர்களை NATIONAL PRESS & MEDIA FEDERATION சார்பில் கௌரவித்தது. 

தேசிய பத்திரிக்கையாளர் தின நிகழ்ச்சியை நடத்திய NATIONAL PRESS & MEDIA FEDERATION அமைப்பை பத்திரிகையாளர்களும் தொழிலதி

பர்களும் அரசியல் பிரமுகர்களும்  வெளிநாடு வாழ் தமிழர்களும் வெகுவாக வாழ்த்தினர்..

 

தேசிய பத்திரிகையாளர் தினத்திற்கு வாழ்த்து தெரிவித்த தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாரத பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட வாழ்த்து தெரிவித்த தலைவர்களுக்கு NATIONAL PRESS & MEDIA FEDERATION சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

செய்தி வெளியீடு;

NATIONAL PRESS & MEDIA FEDERATION

H.O இராமநாதபுரம் மாவட்டம்

அரசு பதிவு எண் 773/2007

தொலைபேசி எண் 9443465765

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here