தமிழ்நாட்டில் சிறு பான்மையின கைத்தறி, கைவினை கலைஞர்களுக்கு அறிமுக புதிய கடனுதவி திட்டம் தமிழ்நாடு சிறுபான்மையினர்  பொருளாதார  மேம்பாட்டு கழகம் மூலமாக கைத்தறி மற்றும் கைவினை கலைஞர்கள் பயன் பெற விராசட் என்ற திட்டத்தின் கீழ் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்.என மாவட்ட நிருவாகம் அறிவுறுத்தியுள்ளது.

செய்தி சேகரிப்பு இராம மூர்த்தி; புகைப்பட கலைஞர் இரமேஷ்

திருவண்ணாமலை, ஆக.20-

திருவண்ணாமலை மாவட்டத்தில் கைவினைப் பணிகளில் ஈடுப்பட்டுள்ள ஏழை சிறுபான்மையின கைத்தறி மற்றும் கலைஞர்களுக்கு தேசிய சிறுபான்மையினர் வளர்ச்சி நிதிக்  கழகம் மற்றும் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலமாக கைத்தறி மற்றும் கைவினை கலைஞர்கள்  மூலப்பொருட்கள், கருவிகள்  இயந்திரங்கள் போன்றவற்றை வாங்குவதற்காக விராசட் என்ற பெயரில் குறைந்த வட்டி விகிதத்தில் புதிய கடனுதவி திட்டத்தை அறிவித்துள்ளது.

இத்திட்டங்களுக்கான விண்ணப்பங்கள்  வரவேற்கப்படுகின்றன.
இத்திட்டத்தின் கீழ், நிதியுதவி தேவைப்படும் சிறுபான்மையின கைத்தறி மற்றும் கைவினை கலைஞர்களுக்கு  அதிகபட்சமாக ரூ.10 இலட்சம் வரை கடன் வழங்கப்படும்.

மேலும் இத்திட்டத்தின் கீழ் கடன் பெற குடும்ப ஆண்டு வருமானம் நகர் புறமாயின் ரூ.1,20,000 க்கு மிகமாலும் , கிராம புறமாயின் ரூ. 98,000 க்கு மிகமாலும் இருத்தல் வேண்டும்.

இத்திட்டத்தின் கீழ் ஆண்  கைவினை கலைஞர்களுக்கு ஆண்டுக்கு 5% வட்டி விகிதமும், பெண் கைவினை கலைஞர்களுக்கு 4% வட்டி விகிதத்திலும் கடன் வழங்கப்படுகிறது. எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தில் வசிக்கும் சிறுபான்மை இனத்தை சார்ந்த (கிறிஸ்துவ, முஸ்லிம், புத்த, சீக்கியர், பார்ஸி, மற்றும் ஜெயின்) கைத்தறி மற்றும் கைவினை கலைஞர்கள் இத்திட்டத்தின் கீழ் கடன் பெற உரிய ஆவணங்களான ரேஷன் கார்டு,  சாதிச்சான்று,  இருப்பிடச்சான்று,  ஆதார் அட்டை, வருமனச்சான்று,  புகைப்படம்,  தொழில் குறித்த விவரம், திட்டஅறிக்கை மற்றும் கூட்டுறவு வங்கிகள் கோரும் இதர ஆவணங்களை திருவண்ணாமலை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின நல அலுவலகம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம். எனவே மேற்குறிப்பிட்ட திட்டத்தின் கீழ், அனைத்து சிறுபான்மையின மக்களும் கடனுதவி  பெற்று பயனடையுமாறு  மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ்  தெரிவித்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here