கும்மிடிப்பூண்டி, ஆக. 12 –
கும்மிடிப்பூண்டி ஒன்றியம் சிப்காட் தொழில் பேட்டையில் எஸ் ஏ சி இன்ஜின் காம்பொனென்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ் இண்டஸ்ட்ரியல் சிட்டி இணைந்து நடத்திய மாபெரும் ரத்ததான முகாம் எஸ் ஏ சி இன்ஜின் காம்பொனென்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் இயக்குனர் என். சுப்ரமணியன் தலைமையில் நடைபெற்றது.
ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ் இண்டஸ்ட்ரியல் சிட்டி தலைவர் எமிலி டைட்டஸ், செயலாளர் சீனிவாசன் மற்றும் சிப்காட் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் கோ. மா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றனர்.
அதேபோல் சிப்காட் தொழில் பேட்டையில் உள்ள பெரும்பாலான தொழிற்சாலைகளை சேர்ந்த தொழிலாளர்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்று ரத்ததானம் வழங்கினார்கள். வட்டார மருத்துவ அலுவலர் கோவிந்தராஜன் தலைமையில், மருத்துவர் வரதராஜன், மருத்துவர் தேவராஜ் உள்ளிட்ட 15 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் இம்முகாமில் பங்கேற்றனர்.
இதில் எஸ்ஏசி மனிதவள மேலாளர் சதிஷ், ஐசிஎம்ஏ பிரேம் குமார் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டு தொண்டாற்றினர். மேலும் சிப்காட் வளாகத்தில் பறவைகள் பயன்பெறும் வகையில் சுவை தரக்கூடிய 20 பழக்கன்றுகள் நடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.