திருவண்ணாமலை ஜூலை.22-
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று பரவாமல் தடுத்து மக்களின் விலைமதிப்பற்ற உயிர்களை காக்கும் நோக்கத்தில் ஊரடங்கு வருகிற 31ந் தேதி வரை நீட்டிப்பு செய்து அரசு அறிவித்துள்ளது. தற்போது தளர்வுகளுடன் முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால் நாளை 23ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.38 மணிமுதல் நாளைமறுநாள் 24ந் தேதி மறுநாள் (சனிக்கிழமை) காலை 8.51 மணிவரை பவுர்ணமி கிரிவலம் செல்ல அனுமதி கிடையாது. எனவே பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம் செல்ல திருவண்ணாமலைக்கு வரவேண்டாம் என கேட்டுக கொள்ளப்படுறார்கள். தமிழக அரசின் கொரோனா மேலாண்மை தேசிய வழிகாட்டுதலின்படி கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்தவும் பொதுமக்களை பாதுகாக்கவும் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைக்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து 17வது மாதமாக பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் விரக்தியடைந்துள்ளனர். கிரிவலப் பாதையில் கடை வைத்துள்ள சிறுவியாபாரிகளும் ஏமாற்றமடைந்துள்ளனர்.