சென்னை ஆவடியில் வன்னியர்களுக்கு வழங்கிய இடஒதுக்கீட்டை மீண்டும் நடைமுறைப்படுத்த வழலியுறுத்தி 200க்கும் மேற்பட்ட பாமக வினர்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

ஆவடி, நவ. 2 –

வன்னியர்களுக்கான 10.5% உள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. இதனை கண்டித்து பாமகவினர் தங்களது கண்டனத்தை தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் மூலம் தெரிவித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சென்னை ஆவடி மாநகராட்சி அருகில் பாமக வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். மாநில துணை அமைப்பு செயலாளர் ஆனந்த கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கிட்டை ரத்து செய்ததற்கு கண்டன கோஷங்களை எழுப்பினர்.. மேலும் அமல்ப்படுத்தப்பட்ட இடஒதுக்கீட்டை மீண்டும் நடைமுறை படுத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் ஹரிஷ், நகர செயலாளர் செந்தில் குமார், பாண்டியன், பாஸ்கர், மாரியப்பன் பட்டாபிராம் தேவராஜபுரம் மணி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் வன்னிய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here