திருவண்ணாமலை ஜூலை.22-
இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. வழக்கமாக பக்ரீத் பண்டிகையையட்டி மைதானங்களில் சிறப்பு தொழுகை நடைபெறும். இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக சமூக இடைவெளியுடன் மசூதிகளில் சிறப்பு தொழுகை நடத்த அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி நேற்று காலையில் முஸ்லீம்கள் புத்தாடை அணிந்து அந்தந்த பகுதிகளில் உள்ள மசூதிகளில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை கீழ்பென்னாத்தூர் வேட்டவலம் ஆவூர் செங்கம் ஆரணி கண்ணமங்கலம் போளூர் சேத்துப்பட்டு செய்யாறு வந்தவாசி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மசூதிகளில் சிறப்பு தொழுகை நேற்று நடந்தது. தொழுகை முடிந்து வந்தவர்கள் வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர்.
இதேபோல கலசபாக்கம் பகுதியில் உள்ள எர்ணாமங்கலம் ஊராட்சியில் உள்ள இஸ்லாமியர்கள் தொழுகைநிலைக்கு சென்று பக்ரீத் பண்டிகை இஸ்லாமியர்களுடன் ஒன்றிணைந்து பெ.சு.தி.சரவணன் எம்எல்ஏ பக்ரீத் பண்டிகையை சிறப்பாக கொண்டாடினார். இதில் கலசபாக்கம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சிவக்குமார், மேற்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் சுப்பிரமணி, கலசபாக்கம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் அன்பரசி ராஜசேகர் மற்றும் திமுக நிர்வாகிகள், இஸ்லாமியர்கள் அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்றி பக்ரீத் பண்டிகையில் கலந்து கொண்டனர்.