பொன்னேரி, மே. 28 –
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ள திருப்பாலைவனம் பஜார் பகுதியில், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட மீஞ்சூர் வடக்கு ஒன்றிய திமுக இளைஞரணி சார்பில் , தமிழ்நாடு முதல்வரின் திராவிட மாடல் ஆட்சியின் இரண்டு ஆண்டு கால சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரம் கூட்டம் நடைபெற்றது.
மேலும் இக்கூட்டம், மீஞ்சூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ஆசான பூதூர் பா.சுகுமாரன் தலைமையிலும், மாவட்ட பிரதிநிதி ராஜா, மாவட்ட துணை செயலாளர் கதிரவன்,மீஞ்சூர் ஒன்றிய பெருந்தலைவர் அத்திப்பட்டு ஜி.ரவி, ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் எம்.எல். சிலம்பரசன், திருப்பாலைவனம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அன்பு உள்ளிட்டவர்கள் முன்னிலையிலும் நடைப்பெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக தலைமை கழக பேச்சாளர் ஆவடி சி. பாஸ்கர் திமுக அரசின் இரண்டு ஆண்டு கால சாதனைகளை விளக்கி பேசினார். நிகழ்ச்சியில் பொன்னேரி நகர மன்ற தலைவர் டாக்டர்.பரிமளம் விஸ்வநாதன், இளைஞரணி பொறுப்பாளர் லோகேஷ், உள்ளிட்டவர்களும் கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என திரளானவர்கள் பங்கேற்றனர்.
வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும், மீஞ்சூர் வடக்கு ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளர் எம் எல் சிலம்பரசன் செய்திருந்தார். கூட்டத்தின் இறுதியில், மீஞ்சூர் வடக்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் ஸ்ரீதர் கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.























