திருவண்ணாமலை, ஆக.5-
திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள வேங்கிக்கால் நொச்சிமலை பவித்திரம் பெரிய கல்லப்பாடி காட்டாம்பூண்டி ஆகிய ஊராட்சிகளில் நடைப் பெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை கூடுதல் ஆட்சியரும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மு.பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது கழிவுநீர் கால்வாய் பணிகள் ஜல்ஜீவன் மிஷன் குடிநீர் வழங்கும் பணிகள், பாரத பிரதமர் வீடு வழங்கும் திட்ட பணிகள் பவித்திரம் ஊராட்சியில் சமத்துவபுரம் காட்டாம்பூண்டி ஊராட்சியில் அடர்காடு (மியா வாக்கி) அமைக்கும் பணிகள் ஆகிய பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை பார்வையிட்ட அவர் காட்டாம்பூண்டி பகுதியில் உள்ள அடர்காடு பகுதியில் மரக்கன்றுகள் நட்டு துவக்கி வைத்த அவர் அனைத்து பணிகளையம் விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
அதனை தொடர்ந்து திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய அனைத்து அலுவலர்கள் மற்றும் ஊராட்சி செயலர்களுக்கான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கூடுதல் ஆட்சியர் மு.பிரதாப் அனைத்து வளர்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற் கொண்ட அவர் நிலுவையிலுள்ள பணிகள் விரைந்து முடிக்க அறிவுரை வழங்கினார்.
ஆய்வின் போது ஆணையாளர் கே.சி.அமிர்தராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ.) சு.அருணாசலம், மற்றும் ஒன்றிய உதவி பொறியாளர்கள், பணி மேற் பார்வைகள், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.