திருவண்ணாமலை மார்ச்.20-
வருமான வரித்துறை ஊழியர்கள் சம்மேளனம் சார்பில் வருகிற 28, 29 ஆகிய 2 நாட்கள் நடைபெறவுள்ள நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் குறித்த திருவண்ணாமலை வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் அகில இந்திய தலைவர் எம்.எஸ்.வெங்கடேசன், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் பழைய ஓய்வூதிய திட்டமே அமுல்படுத்த வேண்டும். நாடுமுழுவதும் வருமான வரித்துறையில் நிரப்பப்படாமல் உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும். வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனத்தை விரைந்து வழங்க வேண்டும். பணிநியமன விதிகளை முறைப்படுத்த வேண்டும். என்பன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 28, 29 தேதிகளில் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் நடைபெறவுள்ளது.
இதில் இந்தியா முழுவதும் உள்ள 572 வருமான வரித்துறை அலுவலகங்களில் பணிபுரியும் சுமார் 36ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர். இந்த 2 நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் 25 கோடி தொழிலாளர்கள் இணைந்து 100 சதவிதம் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர் என்றார். அப்போது தமிழக மாநிலத் தலைவர் பி.ஆர்.ஷியாம்நாத், சென்னை அமைப்பு செயலாளர் ஓம்பிரகாஷ் படேல் வேலூர் சரக செயலாளர் கே.கணேசன் ஆகியோர் உடனிருந்தனர்.




















