செய்தி சேகரிப்பு இராம மூர்த்தி
திருவண்ணாமலை, ஆக.18-
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த சந்தவாசல் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகள் நல சட்டம் 2016 திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் மாற்றுத் திறனாளிக்கான சிறப்பு நலத் திட்ட முகாம் பீனிக்ஸ் மன வளர்ச்சி குன்றியோர் பள்ளி தாளாளர் குமரவேல் தலைமையில் நடந்தது.
இம் முகாமில் சந்தவாசல் ஊராட்சி ஒன்றிய தலைவர் தேசிங்கு முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாவட்ட மாற்று திறனாளி நல அலுவலர் ஜோதிலிங்கம் இரண்டு மாற்றுத் திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகளும் 5 மாற்றுத் திறனாளிகளுக்கு காதில் பொருத்தக் கூடிய ஒலி கருவிகள் உள்பட நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து முகாமில் கலந்து கொண்ட 56 மாற்றுத் திறனாளிகள் அனைவரும் கொரோனா முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.
இம் முகாமில் மாற்றுத் திறனாளி நல துணை அலுவலர் முனுசாமி, போளூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சுந்தர், மருத்துவர் இளங்கோ, சுகாதார மேற்பார்வையாளர் ஜெயசீலன், சுகாதார ஆய்வாளர் அருண்குமார், மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.