சென்னை, டிச. 27 –

சென்னை ஜனசக்தி நாளிதழில் பல வருடங்களாக வெகுச் சிறப்பாக பணியாற்றி வந்த தோழர் சி.கே.பிரிதிவிராஜ் சில தினங்களுக்கு முன்பு திடீரென ஏற்பட்ட உடல் நலக் குறைவால் அகால மரணம் அடைந்தார். மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த அன்னாரின் பூதவுடலுக்கு உற்றார் உறவினர் மற்றும் பத்திரிகையாளர் நண்பர்கள் என திரளானவர்கள் பங்கேற்று மரியாதை செலுத்தப்பட்டு பின்னர் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இன்று சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் மறைந்த ஊடகவியலாளர் சி.கே.பிரித்திவிராஜ் அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சி பொதுவுடமை இயக்கத்தின் மூத்த தோழர் சி.மகேந்திரன் தலைமையில் மாலை ஐந்து மணியளவில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலிபூங்குன்றன்,  பத்திரிகையாளர் மன்ற செயலாளர் பாரதிதமிழன், பேராசிரியர் மா.து.ராஜகுமார் ஆகியோர் சி.கே.பி உடனான தங்கள் நட்பினையும் அவரின் உயரிய சிந்தனை மற்றும் பண்புகளைப் பற்றியும் நினைக் கூர்ந்தனர்.

மேலும் இந்நிகழ்வில் அவருடன்‌ ஜனசக்தியில் பணியாற்றிய நண்பர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் என திரளானவர்கள் பங்கேற்று அவருக்கு நினைவஞ்சலி செலுத்தினார்கள்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here