மயிலாடுதுறை, மே. 12 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்..

நேற்று தனியார் பள்ளி பேருந்துகளின் தரம் குறித்து மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையிலான குழு அப்பேருந்துகள் மற்றும் ஓட்டுநர்களின் உடல், கண்பார்வை தகுதி சரிப்பார்ப்பு, பாதுகாப்பு மற்றும் முதலுதவி சாதனங்கள் பல்வேறு சோதனைகளை அப்போது அக்குழுவினர் மேற் கொண்டனர். மேலும் அக்குழுவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் தீயனைப்பு துறையினர் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டவர்கள் இருந்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையை அடுத்துள்ளது உளுத்து குப்பை. இங்குள்ள தனியார் பள்ளி மைதானத்தில், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி வாகனங்கள் இயக்கும் நிலையில் இருக்கின்தா என வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலம் ஆண்டுதோறும் ஆய்வு நடைபெறுவது வழக்கமாகும்.

அதுப்போன்று இவ்வாண்டுக்கான பேருந்து தகுதி சான்று வழங்குவதற்கான ஆய்வு நேற்று நடைபெற்றது. அதில் 100க்கு மேற்பட்ட .தனியார் பள்ளி வாகன ஆய்வில், மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா – வட்டார போக்குவரத்து இராம்குமார் ஆகியோர் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தனர்.

மேலும் வாகன ஓட்டுனர்களுக்கு இலவச கண்சிகிச்சை முகாமும் நடைபெற்றது. மேலும், வாகன ஓட்டுகளுக்கு அவசர காலத்தில் எப்படி செயல்படுவது என்று தீயணைப்பு துறை மூலம் செய்முறை விளக்கமும் வழங்கப்பட்டது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here