கும்பகோணம், மார்ச். 21 –

கும்பகோணத்தை சுற்றி உள்ள பல்வேறு சிவ மற்றும் வைணவ ஆலயங்களில் இன்று, வி. கே.சசிகலா சாமி தரிசனம் செய்தார்.

கும்பகோணத்தில் இன்று  காலை 6.00 மணிக்கு தஞ்சை அருளானந்தம் நகர் இல்லத்திலிருந்து சசிகலா புறப்பட்டு சாலியமங்கலம் , திருக்கருகாவூர், தாராசுரம் வழியாக வந்து கும்பகோணத்தில் உள்ள அருள்மிகு  ஆதி கும்பேஸ்வரர் திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

பின்னர் அங்கிருந்து புறப்பட்டு அருகில் உள்ள அருள்மிகு சாரங்கபாணி மற்றும் அருள்மிகு சக்கரபாணி திருக்கோயில்களுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து விட்டு, அதன் பின்னர் செல்வம் திடல் அருகில் உள்ள காயத்ரி காளியம்மன் திருக்கோவிலுக்கு வருகை தந்த சசிகலாவுக்கு பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து காயத்ரி காலம் இத்திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு திருவிசநல்லூர், வேப்பத்தூர் திருமங்கலக்குடி வழியாக அருள்மிகு சூரியனார் திருக்கோயிலுக்கு சென்று ஸ்ரீ சூரியபகவானை வழிபடுகிறார்.

மேலும், அங்கிருந்து புறப்பட்டு அருகிலுள்ள கஞ்சனூரில் உள்ள அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயிலில் ஸ்ரீ சுக்ரபகவான் தரிசனம், அதைத் தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்டு திருநாகேஸ்வரத்தில் அமைந்துள்ள   நாகநாத சுவாமி கோவிலில் நடைபெறும் ராகு பெயர்ச்சி விழாவில் கலந்துகொண்டு பரிகார பூஜை செய்து, சுவாமி தரிசனம் செய்கிறார்

அய்யாவாடியில் அமைந்துள்ள அருள்மிகு பிரத்தியங்கிரா தேவியை தரிசித்த பின்னர் அங்கிருந்து புறப்பட்டு பண்டாரவடை, அய்யம்பேட்டை வழியாக தஞ்சாவூர் சென்றடைகிறார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here