டெல்லி, ஜன. 16 –

2022 அக்டோபர் 1 க்குப் பிறகு தயாரிக்கப்பட்ட எம் 1 வகை மோட்டார் வாகனங்களில் இரண்டு பக்கவாட்டு காற்று பைகளையும் இரண்டு பக்கவாட்டு திரைச்சீலை காற்றுப் பைகளையும் பொருத்துவதைக் கட்டாயமாக்கும் நகல் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது

ஓட்டுநர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய 2019 ஜூலை 1 அன்று அல்லது அதற்குப்  பின் தயாரிக்கப்பட்ட எம் 1 வகை (ஓட்டுநர் இருக்கையோடு 8 இருக்கைகளுக்கும் அதிகமில்லாத பயணிகளை ஏற்றிச்செல்ல பயன்படுத்தும் மோட்டார் வாகனங்கள் ) மோட்டார் வாகனங்கள் அனைத்திலும் ஓட்டுநர் அருகே காற்றுப்  பை பொருத்துவதை சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் கட்டாயமாக்கியது.

இதன் பின்னர் ஓட்டுநர் தவிர முன்னிருக்கையில் அமர்ந்து செல்லும் நபருக்கும் காற்றுப்பை பொருத்துவதை 2022 ஜனவரி 1 முதல் எம் 1 வகை வாகனங்கள் அனைத்திற்கும் இந்த அமைச்சகம் கட்டாயமாக்கியது. மோட்டார் வாகனங்களில் பயணம் செய்வோரின் பாதுகாப்பை விரிவுபடுத்த முடிவு செய்த அமைச்சகம் மத்திய மோட்டார் வாகன விதிகள் 1989-ல் திருத்தம் செய்தது. 2022 அக்டோபர் 1 க்கு பிறகு தயாரிக்கப்பட்ட எம் 1  வகை வாகனங்களில் பக்கவாட்டில் இரண்டு காற்று பைகள் பொருத்துவதை கட்டாயமாக்கும் நகல் அறிவிக்கை 2022 ஜனவரி 14 அன்று வெளியிடப்பட்டது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here