திருவாரூர், மே.07 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் …
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம் பூந்தோட்டத்தில் துணை மின் நிலையம் அமைந்துள்ளது. இந்த துணை மின் நிலையத்திலிருந்து நாகை மாவட்டம் அம்பல் என்ற ஊராட்சிக்கு மின்சாரம் செல்கிறது. அங்குள்ள ஆதாயத்தெரு என்ற பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கு மேலாக சரிவர மின்சாரம் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.
மேலும் குறைவான மின்னழுத்தம் கொண்ட மின்சாரம் கொடுக்கப்படுவதாகவும்.. எந்த ஒரு மின்சாதன பொருளையும் சரி வர இயக்க முடியவில்லை.. எனவும், இதனால் பல மின்சார பொருட்கள பழுதடைவதாகவும் ..இந்த பிரச்னை 4 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்வதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்..
மேலும் பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் மின் வாரிய அதிகாரிகள் எடுக்கவில்லை…’ என குற்றம் சாட்டி பூந்தோட்டம் துணைமின் நிலையத்தை அம்பல் ஊராட்சியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் உள்ளிட்ட கிராம மக்கள் அனைவரும் சேர்ந்து முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.





















