கோயம்பேடு, மே. 10 –

சென்னை பெரு நகர காவல்துறை பகுதிக்கு உட்பட்ட கோயம்பேடு காவல் மாவட்டத்தில் உளவுப் பிரிவில் உதவி ஆய்வாளராக மிகச்சிறப்பாக பணிபுரிந்து வந்தவர் ஜான்சன், .இந்நிலையில் அவரது பணிக்காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அவருக்கு பணி நிறைவு விழா மதுரவாயல் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் உடன் பணி புரியும் காவல்துறையினர் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மேலும் இவ்விழாவிற்கு தனது குடும்பாத்தாருடன் பணி நிறைவுப்பெற்ற உளவுப்பிரிவு உதவி ஆய்வாளர் ஜான்சன் பங்கேற்றார். அதனைத் தொடர்ந்து அவருக்கு அவ்விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற அப்பிரிவு உயர் அலுவலர்கள் மற்றும் அவருடன் துணையாகவும் இணையாகவும் பணிப்புரிந்த காவல்துறையினர் என திரளானவர்கள் பங்கேற்று, ஜான்சன் அவரது பணிக்காலத்தில் காவல்துறைக்கு ஆற்றிய சிறப்புமிகு பணிகள் குறித்து நினைவுப்படுத்தியும், பாராட்டியும் வாழ்த்துக்கள் மற்றும் பரிசுப்பொருட்களை அன்பாக வழங்கினார்கள்.

தொடர்ந்து கேக் வெட்டி அவர் மனம் நிறைவடையும் வகையில் அவ்விழாவினை அவர்கள் வெகு சிறப்பாக கொண்டாடினார்கள். மேலும் பணி நிறைவுப்பெற்ற அவருக்கு பூங்கொத்தும் பிரியாவிடைக் கொடுத்தும் அவரை அனைவரும் ஒன்று சேர்ந்து வழியனுப்பி வைத்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here