செங்கல்பட்டு, பிப். 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஆனந்தன்…
இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனத்தில் கடந்த முப்பது ஆண்டிற்கு மேலாக பணிப்புரிந்த இந்திய அம்பேத்கர் மக்கள் கழகத்தின் நிறுவனத்தலைவர் மாமல்லன் என்கின்ற கமலக்கண்ணனின் பணிநிறைவு விழா செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டில் உள்ள பிரபல தனியார் உணவரக அரங்கத்தில் வெகுச்சிற்பாக நடைப்பெற்றது. அதில் சிறப்பு அழைப்பாளராக வருகைத் தந்த இந்தியக் குடியரசுக் கட்சியின் மாநிலத் தலைவர் சே.கு.தமிழரசன் மாமல்லனை பாராட்டி உரை நிகழ்த்தினார்.
இந்திய கார்ப்பரேசன் ஆயில் நிறுவனத்தில் கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக வெகுச் சிறப்பாக பணியாற்றி ஓய்வுப்பெற்ற இந்திய அம்பேத்கர் மக்கள் கழகத்தின் நிறுவனத் தலைவர் மாமல்லன் என்கின்ற கமலக்கண்ணனின் பணிநிறைவு விழா செங்கல்பட்டு அரசு மருத்துவமனை அருகில் உள்ள பிரபல தனியார் உணவக கூட்டரங்கில் நடைப்பெற்றது.
முன்னதாக இரா. கமலக்கண்ணன் என்கிற மாமல்லன் அவர் பணிப்புரிந்த நிறுவனத்தில் பணி நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, அந்நிறுவனத்தில் உள்ள உயர் அதிகாரிகளிடம் வாழ்த்துக்கள் பெற்று பிரியாவிடையளித்து அங்கு இருந்து புறப்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனை எதிரில் அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கார் திருவுருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து, தனியார் உணவக கூட்டரங்கத்தில் அலங்கரிக்கப்பட்டுள்ள அலங்கார மேடைக்கு மாமல்லன் அழைத்து வரப்பட்டார். பின்பு அவருக்கு உறவினர்கள் பொதுமக்கள் மலர் மாலை மலர் கிரீடம் சால்வைகள் அணிவித்து பரிசுப் பொருட்கள் வழங்கி தங்களைப் பாராட்டுக்களை தெரிவித்தனர்.
மேலும் அச்சிறப்பு மிகு நிகழ்வில் பங்கேற்ற இந்தியக் குடியரசுக் கட்சியின் மாநிலத்தலைவர் முனைவர் சே.கு. தமிழரசன், சிறப்பு அழைப்பாளராக அவ்விழாவில் பங்கேற்றார். தொடர்ந்து அவர் வாழ்த்துரை நிகழ்த்தும் போது, பணி ஓய்வு பெற்ற மாமல்லன் டாக்டர் அம்பேத்கர் வழியில் தொடர்ந்து சமூதாயப் பணியாற்றிட வேண்டும் எனவும், அதற்கான மன வலிமையையும், ஒத்துழைப்பையும் அவரது குடும்பத்தினர் அவருக்கு வழங்கிட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இதுவரை சமுதாயச் சேவைகளை சிறப்பாக செய்து வந்த அவர் மேலும் மக்களுக்கு தொண்டாற்ற வேண்டும் எனவும் அப்போது தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, மாவட்ட செயலாளர் மதியழகன் செங்கை மாவட்ட வழக்கறிஞர் செயலாளர் மகிமை சென்னை மாவட்ட தலைவர் திருமலை காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் தினமணி இலத்தூர் ஒன்றிய செயலாளர் பத்ரோஸ் பிரான்சிஸ் இரட்டைமலை சீனிவாச பறையனார் அறக்கட்டளை நிறுவனர் ஆடிட்டர் ராதா சென்னை மாவட்ட செயலாளர் குமரேசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
மேலும் இந்நிகழ்வில் கருப்பையா மற்றும் வேலுச்சாமி. ஏர்போர்ட் மூர்த்தி. பொன் பரப்பி ராஜேந்திரன். காரைக்குடி கருப்பையா. ஆம்பூர் ஜார்ஜ். இளங்கோவன் பன்னீர்செல்வம் லோகநாதன் குணசேகரன். முத்துசாமி பறையனார். சுப்பிரமணியன் துரை அம்பேத்கர் பழனி ஆண்டவர். பிரபு. அயனம்பாக்கம் செய்தியாளர் ஆனந்தன், பன்னீர்செல்வம் சந்தோஷ் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


























