செங்கல்பட்டு, பிப். 28 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் …

செங்கல்பட்டு மாவட்டம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி, செங்கல்பட்டு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் செங்கல்பட்டு  பழைய பேருந்து நிலையத்தில் 200-க்கும் மேற்பட்டோர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

செங்கல்பட்டு நகர தலைவர் பாஸ்கர் தலைமையில் நடைபெற்ற அந்த ஆர்பாட்டத்தில் செங்கல்பட்டு தெற்கு மாவட்ட தலைவர் சுந்தரமூர்த்தி கலந்துக் கொண்டார்.  இராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து கடந்த 3 ஆம் தேதி அன்று கடலுக்கு சென்று கச்சத்தீவு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இரண்டு விசைபடுகளை சிறைபிடித்து படகுகளில் இருந்த 23 மீனவர்களில் 20 மீனவர்களை மட்டும் விடுதலை செய்த இலங்கை நீதிமன்றம் 2 படகுகளின் ஓட்டுநர்களுக்கு தலா 6 மாதங்கள் சிறை தண்டனையும் ஒரு மீனவருக்கு ஒரு ஆண்டு ஆயுள் தண்டனையும் வழங்கி தீரப்பு வழங்கியுள்ளது.

இதனால் இராமேஸ்வரத்தில் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த பத்து ஆண்டுகால பா.ஜ.க ஆட்சியில் தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினர் அடக்குமுறை மேலும் அதிகரித்துள்ளது பத்து ஆண்டுகளில் 400 படகுகள், 3179 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப் பட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று தமிழகத்தில் திருப்பூர், மதுரை வந்த பிரதமர் மோடிக்கு கண்டனம் தெரிவித்தும் இன்று துத்துக்குடி சென்ற பிரதமர் மோடி தமிழகத்தில் இருந்து வெளியேற கோரி பாரதிய ஜனதா கட்சிக்கும் பிரதமர் மோடிக்கு எதிராக கோஷங்களை எழுப்பி கருப்பு கொடி ஏந்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த பத்து ஆண்டுகளில் ஒன்றிய அரசு பெட்ரோல் டீசல் கேஸ் சிலிண்டர்  விலை உயர்வு, செய்து மக்களை ஏமாற்றி வருவதாக குற்றம் சாட்டினர்.

மேலும் அந்த கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் முன்னான் மாவட்ட தலைவர் அண்ணாதுரை, மறைமலைநகர் நகர தலைவர் தனசேகர்,  Obs மாநில பொதுச்செயலாளர் பால்ராஜ், பழவேலி ஊராட்சி மன்ற தலைவர் வின்சென்ட்,   வேண்பாக்கம் கிராம கமிட்டி தலைவர் செல்வராஜ், மாவட்ட செயலாளர் ரியாஸ், கூடுவாஞ்சேரி நகர தலைவல் கிருஷ்ணன், மாநில பொதுக்குழு உறுபினர் ஜோசப் ராஜ், வழக்கறிஞர் ஆகாஷ்,  காட்டாங் கொளத்தூர் வட்டார தலைவர்  ஜானகிராமன், திருக்கழுகுன்றம் தெற்கு வட்டார தலைவர் சாகுல்அமீது,  உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கலந்துக் கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here