திருவள்ளூர், பிப். 05 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் …

திருவள்ளூர் மாவட்டம், ஆர்கே பேட்டை வட்டம், கொண்டாபுரம் காலனியில் சுமார் 20 ஆண்டு காலத்திற்கு மேலாக வசித்து வரும் ஆதிதிராவிட மக்கள் தங்களுக்கு, இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போராட்டத்தில் ஈடுப்பட்ட அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கும் போது, கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தாங்கள் அப்பகுதியில் வசித்து வருவதாகவும், மேலும் ஒரே வீட்டில் இரண்டு அல்லது மூன்று குடும்பங்களாக வசித்து வருவதாகவும் அதனால் கடும் இட நெருக்கடியில் மிகுந்த சிரமங்களுடன் தாங்கள் வாழ்ந்துக் கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

ஆகையால் எங்களுக்கு மாவட்ட ஆட்சியர் எங்கள் மனு மீது விரைவாக  நடவடிக்கை எடுத்து தங்களுக்கு உரிய இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என அப்போது அவர்கள் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்தனர்.

.‌மேலும், அவர்களிடம் இருந்து மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார் அதன் பின்னர் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர்.

பேட்டி

நாகேஸ்வரி,

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here