செங்கல்பட்டு, பிப். 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் …
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் தலைக்கவசம் அணியாமல் வாகனத்தை ஓட்டி வந்த வாகன ஓட்டிகளை மடக்கி பிடித்து, அவர்களை உறுதிமொழி எடுக்க வைத்து அறிவுறுத்திய போக்குவரத்து காவல் துறை காவலர்களின் அச்செயலினால் தலைக்கவசம் அணியாமல் வந்த வாகனோட்டிகள் விலைமதிப்பற்ற மனித உயிரின் மகத்துவத்தை உணர்ந்ததாக அப்போது அவர்கள் தெரிவித்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் பகுதியில் தலைக்கவசம் அணியாமல் வாகனத்தை ஓட்டி வந்த நபர்களை மடக்கிப் பிடித்து அவர்களை உறுதிமொழி எடுக்க வைத்து அவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும்முயற்சியில் ஈடுப்பட்டனர் போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள். அத்தருணம் தலைக்கவசம் இல்லாமல் வாகனத்தை ஓட்டி வந்த வாகன ஓட்டி மற்றும் பொதுமக்களிடமும் விலை மதிப்பற்ற மனித உயிர்களின் மகத்துவத்தை உணர்வதற்கு தகுந்த தருணமாக அந் நிகழ்வு அமைந்த்து.
தமிழ்நாட்டில் ஜனவரி 15 முதல் பிப்ரவரி 14 வரை ஒரு மாதம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாதம் கடைபிடிக்கப்பட்டு வருகின்ற நிலையில் தமிழகம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை போக்குவரத்து காவல்துறையினர் ஈடுப்பட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக இன்று மறைமலைநகர் பகுதியில் போக்குவரத்து காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. போக்குவரத்து காவல் ஆய்வாளர் செல்ல பாண்டியன், மறைமலைநகர் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் கோவிந்தராஜ் தலைமையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
அப்போது தலை கவசம் அணியாமல் வந்த பொதுமக்களை மடக்கி பிடித்து தலைக்கவசம் அணிவதன் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேலும் இனிமேல் வெளியில் செல்லும்போது தவறாமல் தலைக்கவசம் அணிந்து செல்வோம் என உறுதிமொழி எடுக்க வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் மறைமலைநகர் போக்குவரத்து உதவி ஆய்வாளர் லோகேஷ் குமார் உள்ளிட்ட ஏராளமான போலீசார் உடன் இருந்தனர்.





















