கும்பகோணம், ஆக. 30

இந்துமத வழிபாட்டாளர்கள் எந்த ஒரு காரியத்தை தொடங்கும் முன்பும் முழுமுதற் கடவுளாக போற்றப்படும் விநாயகப் பெருமானை வணங்கியே அக்காரியத்தை தொடங்குவது வழக்கம்.

இந்நிலையில் அப்போற்றுதலுக்குரிய  விநாயகப்பெருமானை நாடு முழுவதும் அவர்கள் போற்றி வணங்கும் தினம் விநாயகர் சதுர்த்தி, அத்திருநாள் (Vinayagar Chathurthi) வரும் (நாளை) 31-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதன் ஒரு பகுதியாக விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கும்பகோணத்தில் உள்ள உச்சி பிள்ளையார் கோவிலில் கடந்த சில நாட்களாக விநாயகருக்கு பல்வேறு அலங்காரங்கள் செய்யப்பட்டு அவர் பக்தர்களுக்கு காட்சியளிக்கும் நிகழ்ச்சி இக்கோவிலில் நடைப்பெற்று வந்தது.

 

அதில் முதல் நாள் ஏகாந்தகணபதி அலங்காரம் 2ம் நாள் சிவ கணபதி அலங்காரம் 3ம் நாள் சயன கணபதி அலங்காரம் 4ம் நாள் ராஜ கணபதி 5ம் நாள் வித்யாகணபதி அலங்காரம் 6ம் நாள் ஸ்கந்த கணபதி அலங்காரம் 7ம் நாள் சித்தி புத்தி கணபதி 8ம் நாள் வர கணபதி அலங்காரம் 9ம் நாளான இன்று விநாயகர் திருக்கரங்களை கொண்ட லட்சுமி கணபதி தனது கரங்களில் நீல நிற தாமரைப் பூவுடன்,  தேவிகளுடன் காட்சி தந்தார்.‌ தொடர்ந்து மூலவர் உச்சி பிள்ளையாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

நாளை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மூஷீக வாகனத்தில் காவேரி பகவத் படித்துறையில் தீர்த்தவாரி நடை பெறுவதைத் தொடர்ந்து, இரவு வண்ண மலர்கள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு, சாமி வீதி உலா நிகழ்ச்சி நடைப்பெறவுள்ளது. அந் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் சிவாச்சாரியார் பாபு மற்றும் கோவில் நற்பணி மன்றம் சிறப்பாக செய்துவுள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here