செங்கல்பட்டு, மே. 10 –

செங்கல்பட்டு மாவட்டம், பொத்தேரியில் உள்ள தனியார் (எஸ்.ஆர்.எம்) பல்கலைகழகத்தில் B.optom மூன்றாம் ஆண்டு படித்து வருபவர் மாணவி கிருத்திகா வயது (20) இவர் சென்னை தாம்பரம் அருகேவுள்ள புதிய பெருங்களத்தூர் பகுதியில் வசித்து வருபவர். வழக்கம் போல் கல்லூரி முடிந்து மாலை வீடு திரும்ப பொத்தேரி ரயில் நிலையம் வந்துள்ளார்

அப்போது சென்னை எழுப்பூரில் இருந்து தாம்பரம் வழியாக காரைக்குடி செல்லும் விரைவு ரயில் கல்லூரி மாணவி கிருத்திகா மீது மோதியதில் மாணவி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்

இத்தகவலறிந்து சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்த தாம்பரம் ரயில்வே போலீசார் உயிரிழந்த கல்லூரி மாணவி கிருத்திகாவின் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இரயில்வே போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், தனியார் கல்லூரி மாணவி கிருத்திகா பொத்தேரி ரயில் நிலையத்தில் இரயில் தண்டவாளத்தை கடந்து சென்று நடைமேடையின் விளிம்பில் நின்றவாறு செல்போனில் பேசிக்கொண்டிருந்துள்ளார். அப்போது விரைவு ரயில் மோதி விபத்துக்குள்ளானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

எப்போதும் இந்த இரயில் நிலையத்தில் கல்லூரி மாணவ, மாணவியர்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படும் நிலையில் விரைவு ரயில் மோதி கல்லூரி மாணவி ஒருவர் உயிரிழந்த அச்சம்பவம் பெரும் சோகத்தை அப்பகுதியில் ஏற்படுத்தியுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here