கும்பகோணம், ஏப்.20 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்…
கும்பகோணத்தில் சாஸ்த்ரா பல்கலைகழகத்தில், கணிப்பொறி அறிவியல் துறை சார்பாக பாதுகாப்பான கணிணி மற்றும் அறிவார்ந்த தொழில்நுட்பங்கள் என்ற தலைப்பில் சர்வதேச கருத்தரங்கம் நடைபெற்றது.
கும்பகோணத்தில் சாஸ்த்ரா பல்கலைகழகத்தில், கணிப்பொறி அறிவியல் துறை சார்பாக பாதுகாப்பான கணிணி மற்றும் அறிவார்ந்த தொழில் நுட்பங்கள் என்ற தலைப்பில் சர்வதேச கருத்தரங்கம் சீனிவாச ராமானுஜர் மையத்தில் சீனிவாச இராமானுஜன் மைய புலத்தலைவர் முனைவர் இராமசாமி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இணை புலதலைவர் முனைவர் அல்லிரானி இந்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பின்
(DRDO) விஞ்ஞானி ஜெயபிரதா கணேஷ், துவக்கி வைத்து பாதுகாப்பு பயன்பாடுகளில் செயற்கை நுண்ணறிவின் பயன்கள் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்;.
தொடர்ந்து இக்கருத்தரங்கில் சென்னை இந்திய தொழில்நுட்ப கழக பேராசிரியர் சந்திரசேகர், “ஒளிபடம், வீடியோ மற்றும் உரை செயலாக்கப் பணிகளுக்கான ஆழமான கற்றல் மாதிரிகள்” என்ற தலைப்பிலும் அயர்லாந்து கால்வே பல்கலைகழக பேராசிரியர் பாரதிராஜா அசோக் சக்ரவர்த்தி, வளைதள சுட்டுரையில் திராவிட மொழிகளின் வெறுப்பு பேச்சுகள்” என்ற தலைப்பிலும் டில்லி இந்திய தொழில்நுட்ப கழக பேராசிரியர் இரவிபாபு முலவிசாலா அகச்சிவப்பு ஒளிபடங்களின் சமீபத்திய போக்குகள் என்ற தலைப்பிலும் ஆய்வு உரையாற்றினார்கள்.
இக்கருத்தரங்கில் தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா, உத்திர பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களிலிருந்து 254 மாணவ மாணவியர்கள் கலந்துகொணடு 93 ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தனர். முன்னதாக கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் கலைசெல்வி அனைவரையும் வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் முனைவர் இராஜேஸ்வரி நன்றி கூறினார். இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை பல்கலைகழக துணை வேந்தர் வைத்யசுப்ரமணியம் மற்றும் திட்டம் மற்றும் வளர்ச்சி புலத்தலைவர் முனைவர் சுவாமிநாதன் அவர்களின் வழிகாட்டுதலின்படி கருத்தரங்க செயலாளர்கள் முனைவர் மேகநாதன், பேராசிரியர் அருள்மணி, முனைவர் பிரகாஷ் மற்றும் கணிப்பொறி அறிவியல் துறை பேராசிரியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.





















