மருதடி, சனவரி. 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக தஞ்சாவூர் மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ..
தஞ்சைமாவட்டம், கும்பகோணம் மாநகரம், அருகேவுள்ள மருதடி பிள்ளையாம்பேட்டையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் அருள்மிகு கற்பக விநாயகர், ஆலயத்திற்கான கும்பாபிஷேகம் கடந்த 27 ஆண்டுகளுக்கு பிறகு வெகுச்சிறப்பாக நேற்று நடைப்பெற்றது.
அந்நிகழ்வில் உள்ளூர் மக்கள் மட்டுமல்லாது சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வந்து கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்து உளம் மகிழ்ந்தனர்.
திருவிடைமருதூர் தாலுகா மருதடி பிள்ளையாம்பேட்டை வடக்கு தெருவில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் அருள்மிகு கற்பக விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம் 27 ஆண்டுகளுக்கு பிறகு, ரூபாய் 50 லட்சம் மதிப்பீட்டில் பல மாதங்களாக நடைபெற்று வந்த, கும்பாபிஷேக திருப்பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து கடந்த 20ம் தேதி சனிக்கிழமை முதல் கால யாகபூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், வாஸ்து சாந்தி, யாகசாலை பூஜைகள் தொடங்கியது.
மேலும் நேற்று 4 ஆம் கால யாகசாலை பூஜை நிறைவாக, மகா பூர்ணாஹதியுடன் மங்கள ஆர்த்தி செய்யப்பட்டு மங்கள வாத்தியங்கள் முழங்க கடங்கள் புறப்பாடும் அதனையடுத்து, விமான கலசங்களுக்கு சிவாச்சாரியார்கள் புனித நீரை ஊற்ற, மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது
அந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து 48 நாட்களுக்கு மண்டலாபிஷேக பூஜைகள் நடைபெறுகிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிற்ப கலை அரசு ராதாகிருஷ்ணன், பொறியாளர் அன்பரசன், மற்றும் நாட்டாமைகள் பஞ்சாயத்தார்கள் ஆலய நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தனர்.























