கும்பகோணம், டிச. 11 –
கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகா துகிலி அக்ரகாரம் லட்சுமி நாராயண பெருமாள் கோவில் தங்க முலாம் பூசிய மூலவர் கோபுரம் விமானக் கலசம் மர்ம நபர்களால் திருடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கும்பகோணம் அருகே துகிலி அக்ரகாரத்தில் உள்ள லட்சுமி நாராயணா பெருமாள் கோவில் சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயிலில் மூலவர் ஸ்ரீ நாராயண பெருமாள் உற்சவர் ருக்மணி சத்யபாமா சமேத ராஜகோபால சுவாமி அனுக்கிரக ஆஞ்சநேயர் விநாயகர் சன்னதிகள் உள்ளது. கடந்த 2001 மற்றும் 2016ம் ஆம் ஆண்டுகளில் கோயில் முழுவதும் திருப்பணி செய்யப்பட்ட மகாபாவம் நடந்துள்ளது இதில் 2016 ஆம் ஆண்டு நடந்த கும்பாபிஷேகத்தின் போது மூலவர் விமானக் கலசத்திற்கு தங்க முலாம் பூசப்பட்டு இருந்தது சுமார் ஒன்றரை அடி உயரமுள்ள செப்புக் கலசத்தில் தங்க முலாம் பூசப்பட்டு பளபளப்பாக காணப்பட்டது.
இந்நிலையில் இன்று காலையில் பார்த்தபோது விமான கலசத்தை காணாமல் பக்தர்கள் திடுக்கிட்டனர். கோயில் தக்காரும், கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் சுவாமி திருக்கோயில் செயல் அலுவலருமான கிருஷ்ணகுமார் திருப்பனந்தாள் சரக இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் அருணா மற்றும் அலுவலர்கள் கோவிலை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் பந்தநல்லூர் காவல் துறை ஆய்வாளர் ஓம்பிரகாஷ் உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதுகுறித்து கோயில் செயல் அலுவலர் கிருஷ்ணகுமார் கொடுத்த புகாரின் பேரில் பந்தநல்லூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது திருட்டுப்போன கலசம் சுமார் ஒன்றரை அடி உயரம் ஐந்து கிலோ எடை உள்ளது. இதன் மதிப்பு ரூ 50,000 இருக்கும் என கருதப்படுகிறது.
மேலும் கைரேகை நிபுணர்கள் தஞ்சையிலிருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அதி தீவிர விசாரணை நடைப்பெற்று வருகிறது. கோயிலிலிருந்து மெயின் ரோடு மாவடி விநாயகர் கோயில் வரை மோப்ப நாய் சென்று நின்றது. போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.