சென்னை, மார்ச். 12 –

தமிழக மற்றும் இந்திய மாணவர்களை உக்ரைனில் இருந்து பத்திரமாக மீட்டு, தாயகம் திரும்பி வர நடவடிக்கை எடுத்த வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர் மற்றும் ஒன்றிய அரசுக்கும் தமிழ்நாடு முதலைமைச்சர் மு.க ஸ்டாலின் தொலைப்பேசியில் நன்றி தெரிவித்தார்.

உக்ரைன் நாட்டில் சிக்கித்தவித்த தமிழக மாணவர்கள் உள்ளிட்ட இந்திய மாணவர்கள் அனைவரையும் பத்திரமாக மீட்டதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்தார். இன்று விமான நிலையத்தில் உக்ரைன் நாட்டில் இருந்து திரும்பிய தமிழக மாணவர்கள் கடைசி குழுவினரை நேரில் வரவேற்ற முதலமைச்சர் , அதன் பிறகு ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சுப்பிரமணியன் அவரிடத்தில் தொலைபேசி மூலம் தொடர்புக் கொண்டு தமிழக மாணவர்கள் அனைவரும் பாதுகாப்பாக திரும்ப நடவடிக்கை மேற்கொண்ட ஒன்றிய அரசுக்கும், ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சருக்கும் தமது நன்றியை தெரிவித்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here