திருவள்ளூர், ஏப். 26 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் …

திருவள்ளூர் மாவட்டம், பேரம்பாக்கத்தில் அமைந்துள்ள  டைல்ஸ் கடை உள்ளிட்ட மூன்று கடைகளில் கத்தியை காட்டி மாமூல் கேட்டு மிரட்டிய மர்ம நபர்களின் சிசிடிவி காட்சி வைரலாகி வருகிறது. மேலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் படி அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

பேரம்பாக்கம் பகுதியில் ஆறுமுகம் என்பவர் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக டைல்ஸ் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் திடீரென்று மர்ம நபர்கள் மூன்று பேர் இருசக்கர வாகனத்தில் வந்து கடை உரிமையாளரான ஆறுமுகத்தை கத்தியை காட்டி மிரட்டி தங்களுக்கு மாமுல் கொடுக்க வேண்டும் என்று மிரட்டி உள்ளனர்.

அவர் தர மறுத்ததால் அவர்களில் ஒருவர் உரிமையாளர் ஆறுமுகத்தை தாக்கியுள்ளார். அதில் நிலை தடுமாறிய ஆறுமுகம் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றுள்ளார். மேலும் அவரிடம் எங்களுக்கு மாமுல் தரவில்லை என்றால் உன்னை கொலை செய்து விடுவேன் என மிரட்டி விட்டு  அங்கிருந்து இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு கிளம்பிச் சென்றுள்ளனர்.

அதுப்போன்று அப்பகுதியில் உள்ள மேலும் மூன்று கடைகளில் இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்பு மாமுல் கேட்டு கத்தியை காட்டி மிரட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் மீண்டும் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதை   காவல்துறையினர்  கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடை உரிமையாளரை தாக்கி விட்டு செல்லும்  சிசிடி காட்சி கேமராவில் பதிவாகி வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here