காஞ்சிபுரம், ஏப். 23 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்…

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீஆனந்தவல்லி நாயகா சமேத சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை மாத பிரம்மோற்சவ திருவிழா ஆண்டுதோறும் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கமாகும்.

அதுப்போன்பு நடப்பு ஆண்டும் அச் சித்திரை மாத பிரம்மோற்சவ திருவிழா கடந்த 17 ஆம் தேதி கொடியேற்றத்துடன் வெகுச்சிறப்பாக துவங்கியது. அதைத் தொடர்ந்து, முக்கிய திருவிழாவான தேர் திருவிழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.

அவ்விழாவினை முன்னிட்டு அருள்மிகு ஆனந்தவல்லி நாயகா தாயார் சமேத ஸ்ரீசுந்தர வரதராஜப் பெருமாள் அத்திருத்தேரில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க அத்தேர் ஆனந்த ஐயங்கார் தெருவில் இருந்து புறப்பட்டு மாடவீதி,  பஜார் வீதி உள்ளிட்ட மாநகரின் முக்கிய வீதிகள் வழியாக உலா வந்து  மீண்டும் புறப்பட்ட இடத்தில் நிலை கொண்டது.

அத்திருத்தேர் திருவிழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். வழிநெடுகிலும் சுவாமிகளுக்கு தொடர்ந்து,  தீபாராதனைகள் காட்டி பொதுமக்கள் வழிபாடு செய்தனர்.

அதே போல், தேர் திருவிழாவையொட்டி, பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here