தஞ்சாவூர், பிப்.29 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ..
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே வீரியம் கோட்டையில் அட்லாண்டிக் பன்னாட்டு பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில், 20k24 என்ற, புதிய வகை மாடல் கார்களின் கண்காட்சி நடைபெற்றது.
மேலும் அதில் மகேந்திரா ஸ்கார்பியோ, தார், ஹுண்டாய் வெரினா, மாருதி ஸ்விப்ட், டொயோட்டா ஹை ரைடர், டாடா சபாரி உள்ளிட்ட முன்னணி கார் நிறுவனங்களின் 30 க்கும் மேற்பட்ட கார்கள் இடம் பெற்றன. அதில் கல்லூரி தலைவர் சீனிவாசன் மற்றும் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில்,
பள்ளியில் 6, 7, 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் புது வகையான கார்களின் டெக்னாலஜி குறித்து பார்வையாளர்களுக்கு விளக்கம் அளித்தனர்.
அப்போது காரின் மாடல், மற்றும் பெட்ரோல் காரா, டீசல் காரா, எனவும் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு, எவ்வளவு கிலோமீட்டர் கொடுக்கும், மற்றும் அந்த காரில் உள்ள சென்சார், பிரேக்கிங் சிஸ்டம், ஆட்டோமேடிக், மேனுவல் கியர் உள்ளிட்ட சிறப்பம்சங்கள் குறித்து விளக்கம் அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து, வங்கிக்கடன் பெறும் நடைமுறைகள், காப்பீடு செய்யும் வழிமுறைகள் குறித்தும் கைதேர்ந்த விற்பனை பிரதிநிதிகள் போல் விளக்கம் அளித்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இந்த கார் கண்காட்சியை நூற்றுக்கணக்கானோர் கண்டு ரசித்தனர். இதில், 140 மாணவர்கள் கலந்து கொண்டு கார்கள் குறித்து விளக்கம் அளித்தனர்.