ராமநாதபுரம்: திருச்சியில் தமிழ்நாடு சமூக சேவகர்கள் கூட்டமைப்பு சார்பில் நீர் நிலைகள் பாதுகாப்பு மாநில மாநாடு நடந்தது. மாநாட்டில் தமிழ்நாடு சமூக சேவர்கள் கூட்டமைப்பு மாநில தலைவர் டாக்டர் ஜான் பீட்டர் தலைமை வகித்தார். தென்னிந்திய நதி பிரிவு விவசாய சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு முன்னிலை வகித்தார். மத்திய பிரதேசம் இந்துார் ஜெயராஜ் மகாராஜ் , வேளாங்கன்னி கலை மற்றும் அறிவியல் கல்லுாரி தாளாளர் செபாஸ்டின் பெரியண்ணா, , விவேகானந்தன் சேர்மன் மாரல் ரிசோர்ஸ் அண்ட் ரிசர்ச் பவுண்டேசன் சேர்மன் விவேகானந்தன், ராஜஸ்தான் சரண்தாஸ் மகராஜ், ராம்சந்தர் சவுத்ரி, டாக்டர் சந்திரேசகர் ஸ்ரீ வராகி அம்மன் சித்தபீடம் டாக்டர் சந்திரசேகர், ஆகியோர் மாநாட்டில் தண்ணீர் அவசியம் குறித்து சிறப்புரை யாற்றினர். மாநாட்டின் முக்கியமான தண்ணீர் தேவைகள் குறித்து பி.வி.எம்.அறக்கட்டளை சேர்மன் மற்றும் சமூக ஆர்வலர் தேசிய விருதாளர் டாக்டர் அப்துல் ரசாக் பேசியதாவது: உலகில் இதுவரை உலகப் போர் இரண்டு போர்கள் நடந்துள்ளன. அந்த போர்களில் நாட்டின் திறமைகளை காட்டுவுதற்கும், மற்றொரு நாட்டை பிடிப்பதற்கும் அழிப்பதற்கும் நடந்த போர்தான். ஆனால் 3ம் உலக போர் வர உள்ளது. அந்த உலகப் போர் வர முக்கிய காரணம் நீருக்காகத் தான் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. தற் போதுள்ள நீர் வறட்சி நிலை நீடிக்கும் பட்சத்தில் வருங் காலத்தில் நீர் கிடைக்காமல் அபாயகரமான சூழல் ஏற்பட்டு உலகம் நீருக்காக பெரிய யுத்தக் களத்தை சந்திக்கும் அதற்கு முன் விழித்துக் கொண்டு மத்திய மாநில அரசுகள் நீர் நிலைகளை பாதுகாத்திடாமலும், மக்கள் மழைகள் குறைந்து பெய்தாலும் அந்த தண்ணீரையும் சேமிக்காமல் வீணாக கடலில் கலந்து கொண்டு இருப்பதை கண்ணால் பார்க்க முடிகிறது. எத்தனையோ திட்டங்கள் அரசு இலவசமாக மக்களுக்கு கொடுத்தாலும் அதைவிட தலையாய் சிறந்த கடமையாக இருப்பது நீர் நிலைகளை பாது காப்பது மட்டுமே. இத் திட்டத்திற்காக தமிழ்நாடு அரசு 1250 கோடி ரூபாய் குடிமராமத்து பணிக்காக ஓதுக்கப் பட்டு கண் துடைப்பு பணி போன்றுதான் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. மேலும், மணல் மாபியாக்களுக்கு குடிமராமத்து பணிகள் வரப் பிரசாதமாக அமைந்துள்ளது. இதற்கான நிதிகளை கும்பலாக கொள்ளை அடிக்கும் நிலைதான் தற்போது தமிழகத்தில் நிலவி வருகிறது. இதற்கு உதாரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் கடலாடி ஊராட்சி ஒன்றியத்திற் குட்பட்ட சிக்கல் ஊராட்சி கண்மாய் குடிமராமத்து என்ற பெயரில் ரூ.69.10 லட்சம் மதிப்பில் பணிகள் நடை பெறுவதாக கூறி கண்மாயில் உள்ள மணலை தோண்டி வியாபாரம் செய்து கூட்டு கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். இச் செயலுக்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு அமைப்புகள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன. இதற்கு மாவட்டத்தில் உள்ள பொதுப் பணித்துறை அதிகாரிகளும் உடந்தையாக இருக்கக் கூடும் என பொதுமக்கள் சந்தேக்கிக் கின்றனர். இதனால் இனி தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் குடிமராமத்து பணிகளை செய்வதற்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும். இதன் மூலமாகவே குடிமராமத்து பணிகள் சிறப்பாக நடைபெறும் மேலும் அரசியலோ அல்லது மணல் மாபியாக்களோ தலையீடு இல்லாமல் பணிகள் மக்கள் பணிகளாக சிறப்பாக நடைபெறும், என்றார். மாநில மாநாட்டில் மாநில, மண்டலம், மாவட்டம் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் திரளாக பங்கேற்றனர். ராமநாதபுரம் செஸ்ட் ஏஞ்சல் மனநலம் குன்றியோர் சிறப்பு பள்ளி தலைமை ஆசிரியர் தசரதபூபதி நன்றி கூறினார்.
முகப்பு மாவட்டம் ராமநாதபுரம் ராமநாதபுரம் மாவட்டத்தில் குடிமராமத்து பணியில் பல கோடிகள் கொள்ளை ! திருச்சி நீர்நிலைகள் பாதுகாப்பு மாநில...