சென்னை, ஜூன். 02 –

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு நிலுவையில் உள்ள சட்டமுன் வடிவுகளுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆளுநர் மாளிகையில் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளார்.

குறிப்பாக மருத்துவ மாணவர் சேர்க்கை விரைவில் தொடங்க உள்ள நிலையில் தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக்கழக சட்டமுன்வடிவு 2022- க்கு ஒப்புதல் வழங்கிட ஆளுநரை முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

முன்னதாக நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் சட்டமுன்வடிவை குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்த தமிழக ஆளுநருக்கு முதலமைச்சர் தனது நன்றியினை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்கள் திருத்த சட்டமுன்வடிவு 1983, தமிழ்நாடு அடுக்குமாடிக் குடியிருப்பு உரிமை சட்டமுன்வடிவு 2022, தமிழ்நாடு பல்கலைக்கழக சட்டமுன்வடிவு 2022, உள்ளிட்ட 21 சட்டமுன் வடிவுகளுக்கு விரைந்து ஒப்புதல் அளித்து, அரசியல் சாசனத்தின் உணர்வையும், தமிழக மக்களின் விருப்பத்தையும் நிலைநிறுத்திடுமாறு தமிழக ஆளுநரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். ஆளுநருடனான இச்சந்திப்பில் முதலமைச்சர் உடன் அமைச்சர்கள் துரைமுருகன், க.பொன்முடி, தங்கம் தென்னரசு ஆகியோர் இருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here