கும்பகோணம், பிப். 13 –

உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா காதலர்களுக்கு திருமணம் செய்து வைக்கும் வகையில் நடந்துக் கொண்டதால் அதன் நிர்வாகிகள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து இந்து மக்கள் கட்சி அனுமன் சேனாவினர் கூறும்போது காதலர்களுக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல ஆனால், நாங்கள் காதலர் தினத்தை தான் எதிர்க்கிறோம். மேற்கத்திய கலாச்சாரம் கொஞ்சம் கொஞ்சம் ஊடுருவி தமிழகத்தில் பள்ளி கல்லூரி மாணவர்கள் மாணவிகள் கவரப்பட்டு இளம் வயதிலேயே திருமணம் செய்து திருமணங்கள் மன முறிவு ஏற்படுகிறது.

இது போன்ற பல்வேறு எடுத்துக்காட்டுகள் நம்மால் சொல்லமுடியும்.   தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயிலில் தினம் தினம் காதல் ஜோடிகள் இங்கே எல்லை மீறுகிறார்கள். காம களியாட்டத்தில் ஈடுபடுகிறார்கள். இது போன்று ஈடுபடுகிற காதல் ஜோடிகளுக்கு  நாங்கள் திருமணம் செய்து வைக்கும் முயற்சியில்  ஈடுபட்டிருக்கிறோம். அதற்காக மாங்கல்யம் மாலை சீர்வரிசை பொருட்களுடன் இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா மாநில பொதுச் செயலாளர் பாலா தலைமையில் கோஷமிட்டபடி சீர்வரிசை பொருட்களுடன் கோயிலுக்கு வந்த நிர்வாகிகளை காவல்துறை துணை கண்காணிப்பாளர் அசோகன் ஆய்வாளர் ரமேஷ் குமார் மற்றும் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

மாநில பொதுச்செயலாளர் பாலா பேட்டி அளித்த போது  தொடர்ந்து நாங்கள்  வாரம் ஒருமுறை ஞாயிற்றுக் கிழமைகளில் இந்த பூங்காவிற்கு வருகை தந்து காதல் ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கும் முயற்சியில் ஈடுபடுவோம். காவல்துறைக்கும் தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுக்கின்றோம். ஏனோ இன்றைக்கு மட்டும் தான்  காவல்துறை இங்கு வந்து காதல் ஜோடிகளைப் பூங்காவிற்கு செல்ல அனுமதிக்கவில்லை . காவல்துறை அதிகாரிகள் தமிழக அரசும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இங்கு சிறப்பு காவல்படை அமைக்க வேண்டும்.  இதில் மாணவரணி தலைவர் சத்தியமூர்த்தி நகரத் தலைவர் மதன், விக்னேஸ்வரன் இளைஞர் அணி நகர தலைவர் விஜய் பாஜக முன்னாள் தலைவர் ராஜா  மாவட்ட சித்தர் பேரவைத்தலைவர் பாரதிதாசன் சிவசேனா மண்டல பொறுப்பாளர் வேல்முருகன் ஆனந்த், தினேஷ் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

 

பேட்டி : கா பாலா மாநில செயலாளர்

ஹிண்டு மக்கள் கட்சி அனுமன் சேனா

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here