மன்னார்குடி, ஜன. 17 –
தம்பட்டம் செய்திகளுக்காக திருவாரூர் செய்தியாளர் ஜெயராமன் …
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அதிமுக கட்சியின் நிறுவனத் தலைவரும், மறைந்த முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆர் 107 வது பிறந்தநாள் விழா நடைப்பெற்றது. அந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற முன்னாள் அமைச்சர் காமராஜ் எம்.ஜி.ஆரின் திரு உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அந்நிகழ்வில் தொண்டர்களிடையே உரை நிகழ்த்தியவர், மேட்டுர் அணை 42 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நடைப்பெற்று பெறும் திமுக ஆட்சியில் மீண்டும் மூடப்பட்டிருப்பதாக திமு அரசின் மீது குற்றம் சாட்டினார். மேலும் நிர்வாக திறனற்ற இந்த ஆட்சிக்கு எப்போதுதான் மக்கள் முற்றுபுள்ளி வைப்பார்கள் என அப்போது கூட்டத்தினரைப்பார்த்து கேள்வி எழுப்பினார்.
. மறைந்த அதிமுக கட்சியின் நிறுவனத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எம்ஜிஆரின் 107 வது பிறந்தநளை முன்னிட்டு இன்று திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அதிமுக மாவட்ட கழகம் சார்பில் தேரடியில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பேரணியாக இருசக்கர வாகனத்தில், நகரின் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்து, தெற்குவீதியில் உள்ள புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி ஜெயலலிதா திருவுருவச் சிலைக்கு மாவட்ட அதிமுக செயலாளரும் நன்னிலம் சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.காமராஜ் தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து நடைப்பெற்ற அந்நிகழ்வில் உரை நிகழ்த்திய அவர் விவசாயிகளை அதிமுக பாதுகாக்கிறது என்று அழுத்தமாக சொல்ல முடியும் எனவும், மேலும் விவசாயிகளுக்கு எடப்பாடியார் ஆட்சியிலும், அம்மா ஆட்சியிலும், புரட்சி தலைவர் ஆட்சியிலும் எவ்விதமான பிரச்சினைகளும் இல்லை, ஆனால் தற்போது தமிழ்நாட்டில் நடைப்பெற்று வரும் திமுக ஆட்சியில், விவசாயிகள் வேதனை படுகிறார்கள் என தெரிவித்த அவர், மேட்டுர் அணை தற்போது 42 ஆண்டுகளுக்கு பிறகு இந்த திமுக ஆட்சியில் மீண்டும் மூடப்பட்டிருக்கிறது என்றார். மேலும் இதற்கெல்லாம் எப்போதுதான் முற்றுபுள்ளி வரும் என மக்கள் எதிர் பார்த்தது கொண்டிருக்கிறார்கள் எனவும், மேலும் விவசாயிகளின் துயர் போக்கும் ஆட்சியினை புரட்சி தலைவர் எம்ஜிஆர் மற்றும் புரட்சி தலைவி அம்மா வழியில் அண்ணன் எடப்பாடியார் தலைமையில் மீண்டும் தமிழகத்தில் மலரும்போது அமையும் என்ற அவர், அதற்காக கட்சியில் உள்ள அனைவரும் கடுமையாக உழைத்திட வேண்டும் என்றார்.
அந்நிகழ்வில் அதிமுக அமைப்பு செயலாளர் சிவா.ராஜமாணிக்கம் , மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பொன்வாசுகிராம் , மன்னார்குடி நகர செயலாளர் ஆர்.ஜி.குமார் , ஒன்றிய செயலாளர் தமிழ்செல்வன் , மன்னார்குடி ஒன்றிய பெருந்தலைவர் மனோகரன் , முன்னாள் நகர் மன்ற துணை தலைவர் டி.என்.பாஸ்கர் , பொதுக்குழு உறுப்பினர் கலைவாணன் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, நகர, மகளிரணி கிளை நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் என திரளான அக்கட்சியின் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.























