தஞ்சாவூர், மார்ச். 11 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சாவூர் மாவட்டம், மருதுபாண்டியர் கல்வியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் சென்னை இந்திய தொழில் நுட்ப நிறுவனத்தின் (IIT DIRECTOR) இயக்குனர் முனைவர் காமகோடி கலந்து கொண்டு 300 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்பித்தார்.
விழாவின் நிறைவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், நமது நாட்டில் 15 முதல் 35 வயது வரை உள்ளவர்களுக்கு கல்வி வழங்குவது மிகவும் அவசியம் கொடுக்க வேண்டும், அவ்வாறு கொடுக்கவில்லை என்றால் நமது நாடு படிப்பறிவு இல்லாததாக மாறிவிடும் எனவும், மேலும் அக்காரணத்திற்காக பலவிதத்தில் கல்வியை கொண்டு சேர்ப்பதற்கு குறிப்பாக கிராமப்புறங்களில் Tyre2,Tyre3 என்ற அளவில் கொண்டு சேர்ப்பது அரசின் கடமையாகும் என்றார்.
மேலும் பாரதப் பிரதமரின் விக்சித் பாரத் 2047 கனவு நிறைவேற கிராமப்புறங்களில் படிப்பை கொண்டு சேர்ப்பது நமது லட்சிய கடமை, அதை ஐஐடி செய்து வருகிறது என்று கூறினார், மேலும் ஐஐடி நிறுவனத்தில் ஸ்போர்ட்ஸ் கோட்டா அடுத்த வருடம் ஆராய்ச்சி முறையில் ஆரம்பித்துள்ளதாகவும், இதில் விளையாட்டு வீரர்களுக்கு ஐஐடியில் B.Tech படிப்பு படிக்க ஒரு வாய்ப்பு, இது குறித்த தகவல் ஐஐடி வெப்சைட்டில் உள்ளது என்றும் இன்றைக்கு ஏஐ டேட்டா சயின்ஸ் (AI DATA SCIENCE) மிகப்பெரிய விஸ்வரூபம் எடுத்துள்ளது எனவும் மேலும் இன்றைக்கு மார்க்கெட் எக்னாமிக் சேஞ்ச் ஆகியுள்ளது, அதனால் பல துறைகளில் ஏஐ டேட்டா சயின்ஸ் வந்துள்ளதாகவும், குறிப்பாக கெமிக்கல், ஹெல்த், ஸ்மார்ட் சிட்டி, விவசாயம் போன்ற துறைகளில் ஏஐ உள்ளது, அடுத்த வருடம் உலகத்திலேயே முதல் முறையாக ஏஐ டேட்டா அனாலிடிக்ஸ் படிப்பு அறிமுகப்படுத்துகிறோம் என்றார்.
தொடர்ந்து இவ்வாண்டு ஐஐடியில் 368 மாதிரி காப்புரிமை வழங்கப்பட்டுள்ளது, அதுபோலவே அவர்களுடைய பாடத்திட்டத்தை மாற்றம் செய்துள்ளதாகவும், கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில் முனைவோர்களுக்காக சில மாற்றங்கள் அடுத்த வருடம் செய்ய உள்ளதாகவும் அப்போது அவர் கூறினார், குறிப்பாக சந்திராயன், ஆதித்யா வந்த பிறகு AeroSpace ல் நிறைய ஆர்வம் வந்துள்ளது, என்றும் ஸ்போர்ட்ஸ் இன்ஜினியரிங் துறையில் 32 சீட்டு ஒதுக்கி உள்ளதாகவும், 13 இன்டர் ஐஐடி ஸ்போர்ட்ஸ் அனுமதி வாங்கி உள்ளதாகவும் மேலும் சில விளையாட்டுக்கள் வருங்காலங்களில் சேர்க்க உள்ளதாகவும் கூறினார்.
மேலும் தேசிய கல்விக் கொள்கை(National education Policy) ஐஐடி நிறுவனத்திற்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது என்று சில தகவல்களை எடுத்துக் கூறினார், முன்னதாக பட்டமளிப்பு விழாவில் ராமகிருஷ்ண மடம் விமூர்த்தானந்தர், கல்லூரி தலைவர் மருது பாண்டியன் உள்ளிட்ட கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பேட்டி: காமகோடி, ஐஐடி இயக்குனர், சென்னை






















