கும்பகோணம், ஏப். 05 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ..

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகே தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியும், பாஜக கூட்டணி கட்சியான பாமகவும், அதிமுக நேரடியாகவும் களமிறங்கியுள்ளனர். தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில், மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ம.க.ஸ்டாலின், தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

அதன் தொடர்ச்சியாக கும்பகோணம் மாத்திகேட் பகுதியில் இன்று அவர் பிரசாரம் மேற்கொண்டார். அங்கு மண்பாண்ட தொழிலாளர்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது தொழிலாளர்களுடன் அமர்ந்து களிமண்ணில் மண்பாண்டங்களை வடிவமைத்தபடி பிரசாரம் செய்தார். மண்பாண்ட தொழில் செய்து வரும் தொழிலாளி வேட்பாளரிடம் கோரிக்கை வைத்தார்.

அக்கோரிக்கையை கேட்டறிந்த அவர் மத்திய மாநில அரசுகளிடம் வலியுறுத்தி உங்கள் கோரிக்கை நிறைவேற்ற பாடுபடுவேன் என்று தெரிவித்தார். உடன் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு தீவிர பரப்புரையில் ஈடுபட்டனர்.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here