ஆவடி, ஜன. 9 –
இன்று கொரோனா மற்றும் உருமாறிய ஒமைக்ரான் நோய் தொற்று பரவலை தடுக்கும் விதமாக தமிழக அரசு ஊரடங்கு அறிவித்துள்ள நிலையில், அவசரம் மற்றும் முக்கிய தேவைகளுக்கு செல்லும் பொதுமக்களை தவிர்த்து, ஊரைச் சுற்றி திரிபவர்கள் மீது அபராதம் உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகளை தமிழக காவல்துறையினர் எடுத்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட முத்தாபுதுப்பேட்டை காவல் நிலைய சரக ( T8 ) பகுதிகளில் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இன்று வாகன தணிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுப்பட்டனர். அப்போது தேவையற்று சாலைகளில் சுற்றித் திரிந்தவர்களை தடுத்து அவர்களை வீடுகளுக்கு திருப்பி அனுப்பியும், அரசு எடுத்து வரும் கொரோனா பாதுகாப்பு தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தரும் படியும் அறிவுறுத்தினார்கள். தொடர்ந்து கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்கான அடிப்படை பாதுகாப்பை மேற் கொள்ள முகக் கவசங்களை அணியும் படியும் கண்டிப்புடன் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.





















