திருவேற்காடு, ஏப். 02 –

திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட 8வது வார்டு ராஜாங்குப்பம் பகுதியில் ரூ‌.14 லட்சத்தில் புதிதாக கட்டப்படவுள்ள ரேஷன் கடைக்கான கட்டிடப் பணிகளுக்கான பூமி பூஜை நடைப்பெற்றது. அந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற அமைச்சர் சா மு.நாசர் அடிக்கல் நட்டு அப்பணியினை தொடங்கி வைத்தார்.

திருவேற்காடு ராஜாங்குப்பம் பகுதியில் சுமார் 3000 ரேஷன் அட்டைதாரர்கள் அப்பகுதியில் உள்ள ரேஷன் கடையில் பொருட்களை வாங்கி வந்தனர். அதிக எண்ணிக்கையில் அட்டைதாரர்கள் இருப்பதால் பொருட்கள் வாங்க தாமதமாவதால் அந்த கடையை இரண்டாக பிரித்து புதிய ரேஷன் கடை அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையினை ஏற்று, புதிய ரேஷன் கடை கட்டடம் கட்டுவதற்கு சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.14 லட்சம் ஒதுக்கீடு செய்து அமைச்சர் சா.மு.நாசர் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று காலை ராஜாங்குப்பம் பகுதியில் புதிய ரேஷன் கடை கட்டிடம் கட்டுவதற்கான பணிகளை தொடங்கி வைக்கும் விதமாக அமைச்சர் நாசர் தலைமையில் பூமி பூஜை நடைபெற்றது.  இதில் அமைச்சர் நாசர் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து புதிய கட்டிடம் கட்டுவதற்கான பணிகளை தொடங்கி வைத்தார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் திருவேற்காடு நகர மன்ற தலைவர் என்.இ.கே. மூர்த்தி, துணைத்தலைவர் ஆனந்தி ரமேஷ்,  நகராட்சி ஆணையர் ரமேஷ், பொறியாளர் குமார், மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள், திமுக இளைஞர் அணி மாநில துணை செயலாளர் பிரபு கஜேந்திரன்,  திமுக நிர்வாகிகள் ஏ.ஜே.பவுல்,  சங்கர், உமாபதி, பரிசமுத்து, இளையராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here