PIC: File copy
சென்னை அடுத்த பெருங்களத்தூரில் நடைபெற்ற சாலை விபத்தில் பட்டதாரி இளைஞர்கள் 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்த கோரச் சம்பவம் நேற்று நள்ளிரவு நடந்துள்ளது .
செய்தி சேகரிப்பு இசிஆர்.பா.வினோத் கண்ணன்
சென்னை, செப். 5 –
சென்னையை அடுத்த பெருங்களத்தூர் பேருந்து நிலையம் அருகே வண்டலூர் நோக்கி செல்லும் பிரதான சாலையில் நேற்று நள்ளிரவு சுமார் 1:45 மணியளவில் ஒரு பயங்கர சாலை விபத்து நடைபெற்றுள்ளது.
காரில் சென்ற 5 பேர் வாகன விபத்து ஏற்பட்டதில் காரின் இடிபடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்த பீர்க்கன்காரணை போலீசார் மற்றும் தாம்பரம் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காரின் இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை சுமார் 2 மணி நேரம் போராடி 5 பேரின் உடலை மீட்டனர்.
சென்னை கே.கே.நகரை சேர்ந்த அரவிந்த் சங்கர், சேலையூரை சேர்ந்த ஹரீஸ் உள்ளிட்ட மூன்று பேர் இன்று காலை தனியார் நிறுவனத்தில் வேலைக்காக நேர்காணலில் கலந்துகொள்ள இருந்ததாகவும் அதனால் உடன் கல்லூரி படித்த நண்பர்கள் ஒன்று கூடியதாகவும் கூறப்படுகிறது.
சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த நவீன், ராஜஹரீஸ், புதுக்கோட்டையை சேர்ந்த ராகுல், திருச்சியை சேர்ந்த அஜய் சென்னைக்கு வந்துள்ளனர். பின்னர் சென்னை கே.கே.நகரை சேர்ந்த அரவிந்த் சங்கர், சேலையூரை சேர்ந்த காமேஷ் ஆகியோருடன் இனைந்து சென்னை தியாகராய நகர் சென்று மீண்டும் சேலையூர் திரும்பியுள்ளனர்.
காமேஷ் உள்ளிட்ட சிலரை சேலையூரில் விட்டு விட்டு ராஜஹரீஸ், நவீன், ராகுல், அஜய், அரவிந்த் சங்கர் ஆகியோர் காரில் ஒரு ரவுண்டு சென்று வருவதாக கூறிவிட்டு வண்டலூரை நோக்கி ஜி.எஸ்.டி. சாலையில் சென்றுள்ளனர்.
விபத்துக்குள்ளான கார் ராஜஹரீஸ் சித்தப்பா ரமணி என்பவரின் இன்னோவா கிரிஸ்டா கார் என்பதும், காரை சேலம் மாவட்டம் மேட்டுரை சேர்ந்த நவீன் ஓட்டியதும் தெரியவந்தது.
அப்போது பெருங்களத்தூர் பேருந்து நிலையம் அருகே நிறுத்திவைத்திருந்த கண்ட்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் லாரி அடியில் சொகுசு கார் சிக்கி அப்பளம் போல் நொறுங்கியது. மேலும் காரில் இருந்த 5 பேரின் உடல்களை தாம்பரம் தீயணைப்பு துறையினர் சுமார் 2 மணி நேரம் போராடாடி உடல்களை மீட்டனர்.
பலியான 5 பேரின் உடலையும் குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரே கல்லுரியில் படித்த 5 பட்டதாரி இளைஞர்கள் ஒன்றுகூடி சந்தோசமாக இருந்த வேலையில் காரில் லாங் டிரைவ் சென்று வர போனவர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.