இலங்கை அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை யாரும் எதிர்பார்க்காத வகையில் 2-0 என வென்று சாதனைப் படைத்தது. அதைப்போல் இங்கிலாந்துக்கு எதிரான தொடரை 2-1 என வெஸ்ட் இண்டீஸ் கைப்பற்றியது.
இந்நிலையில் நியூசிலாந்து – வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் நாளை தொடங்குகிறது. முதன்முறையாக நியூசிலாந்து ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 2-வது இடத்தை பிடித்திருக்கும் நிலையில், யார் யாரை வேண்டுமென்றாலும் வீழ்த்த முடியும் என்று அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கேன் வில்லியம்சன் கூறுகையில் ‘‘தென்ஆப்பிரிக்காவை இலங்கை வீழ்த்தியது அற்புதமான முயற்சி. தென்ஆப்பிரிக்கா போன்ற அணியை, அவர்களது சொந்த இடம் மட்டுமல்ல எந்த இடத்திலும் வெல்வது எளிதான காரியம் அல்ல. ஆனால், யார் யாரையும் வெல்ல முடியும்’’ என்றார்.