சென்னை, மார்ச். 29 –
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட வளசரவாக்கம் மண்டலம் -11 இராமாபுரம் 154 வார்டுக்கு உட்ப்பட்ட பகுதியில் உள்ள ஆலங்குளத்தை மாமன்ற உறுப்பினர் ராமாபுரம் செல்வகுமார் அரசு அதிகாரிகளுடன் சென்று நேரில் ஆய்வு செய்தார்.
மேலும் அவ்வாய்வின் போது ஆங்காங்கே சிதலமடைந்து இருக்கும் குளக்கரை கரைகளை பலப்படுத்திடவும், குளத்தை சுற்றி சுத்தம் செய்து மக்கள் நடைபாதையாக மாற்றவும், மேலும் பெயர்ந்து கிடக்கும் கற்களை சீர் செய்யவும், மேலும், புதர்போல் மண்டி கிடக்கும் செடிகளை அப்புறப்படுத்தவும் மற்றும் சமூக விரோத செயல்கள் இப்பகுதிகளில் நடந்திடா வண்ணம் இப்பகுதியை பாதுகாப்பு பகுதியாக அமைத்திடவும் அவர் அக்கள ஆய்வின் போது, அரசு அதிகாரியுடன் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி அறிவுறுத்தினார். மேலும் இக்குள சீரமைப்புப் பணி வெகு விரைவில் துவங்கும் என அப்போது தெரிவித்தார்.





















