காஞ்சிபுரம், ஜூலை. 24 –

தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தின் குரூப் 4 (TNPSC) தேர்வு இன்று தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. அது போன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 101 தேர்வு  மையங்களில்  43,051 நபர்கள் தேர்வு எழுதுகின்றனர்.

மேலும் தேர்வு எழுதும் மாணவர்களை கண்காணிக்க ஆட்சியர் தலைமையில் 6 பறக்கும் படைகளும், துணை ஆட்சியர் தலைமையில் 4 பேர் கண்காணிப்பாளரும், மொபைல் டீமில் 27 நபர்களும், மேலும், 148 பேர் வீடியோ ஒளிப்பதிவாளர்கள் ஆகியோரை நியமித்து, குரூப் 4 தேர்வு எழுதும் நபர்களை கண்காணிக்கும் பணிகளை செய்திட மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here