பொன்னேரி, ஏப். 07-

பாஜக மாவட்ட மருத்துவப்பிரிவு தலைவர் தலைமையில் இரத்ததானம் மற்றும் மருத்துவ பயனாளிகளுக்கு பழம் மற்றும் உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி பொன்னேரி அரசு மருத்துவமனையில் நடைப்பெற்றது.

திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி அரசு மருத்துவமனையில் நாள்தோறும் ஏராளமான உள் மற்றும் நோயாளிகள் வந்து செல்கின்றனர்.இந்நிலையில்  மருத்துவமனையில்  உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெற்று வரும் மருத்துவ பயனாளிகளுக்கு பாரதிய ஜனதா கட்சியின் 42வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு ரத்ததானம் மற்றும் ரொட்டிகள் பழங்கள் போன்ற நலவுதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று நலவுதவிகளை வழங்கினார். மேலும் பாஜக கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் 15க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனைக்கு ரத்த வங்கிக்கு சுமார் 3900 யூனிட் ரத்ததானம் வழங்கினர்.

பிஜேபி மாவட்ட மருத்துவப் பிரிவு தலைவர் டாக்டர் கலையரசி கோபாலன். ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பட்டியல் இன அணி மாநில செயற்குழு உறுப்பினர் செந்தில்குமார், மாவட்ட துணைத்தலைவர் ஹேமா மனோஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் நந்தன், பொன்னேரி நகர தலைவர் கோட்டி, பொதுச்செயலாளர் பிரசன்னா, நகர துணைத் தலைவர் மோகன் குமார் இளைஞரணி தலைவர் மகளிர் அணி துணை தலைவி இந்துமதி உள்ளிட்ட பிஜேபி கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனார்கள்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here