ஆவடி, ஏப். 07 –

சென்னை புறநகர் பகுதியான ஆவடியை அடுத்த திருநின்றவூர் பகுதியை சார்ந்த பரத்குமார் என்பவர் திருநின்றவூர் கோமதி புரத்தில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்,

இந்நிலையில் கடந்த கடந்த ஆண்டு ஜனவரி 16 தேதி 2021 ஆம் ஆண்டு (HONDA CITY) என்ற காரை வாங்கி பயன்படுத்தி வந்துள்ளார். இந்த ஆண்டு ஜனவரி மாதம் தனது கார் பழுதாகி நின்ற  காரணத்தால் அதை ஜனவரி மாதம் 19..2022 தேதி அன்று திருநின்றவூர் கோமதிபுரம் பகுதியில் உள்ள அஜய் என்ற கார் மெக்கானிக்கிடம் தனது காரை சரிசெய்து கொடுக்கும்படி கொடுத்துள்ளார் ஆனால் மெக்கானிக் அஜய் ஒரு வாரம் கழித்து காரை வந்து வாங்கி கொள்ளுமாறு தெரிவித்து இருந்ததாகவும். பரத் குமார் தனது காரை எடுக்க ஒரு வாரம் கழித்து வாங்குவதற்காக வந்து பார்க்கும் பொழுது  தனது காரையும் மெக்கானிக் அஜயையும் காணவில்லை என்று தெரிந்தவுடன் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

உடனடியாக மெக்கானிக்கின் செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய போது காரை தந்து விடுவதாக தெரிவித்துள்ளார். ஆனால் தனது காரை இது நாள் வரை திரும்பி தராமல் ஏமாற்றி வந்திருந்த நிலையில் பரத்குமார் மெக்கானிக் அஜய் மீது திருநின்றவூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பரத்குமார் கொடுத்த புகாரின் அடிப்படையில்  போலீசார் மெக்கானிக் அஜய் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு அவர் மீது வழக்குப்பதிவு செய்து குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here