திருவள்ளூர், சனவரி. 26 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் …

எதிர் வரும் 2024 பாராளுமன்றத் தேர்தலுக்காகவே மக்களை திசை திருப்பி பிரதமர் மோடி ராமர் கோவில் கட்டி திறந்து இருப்பாதாக தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் திண்டுக்கல் லியோனி விமர்சித்துள்ளார்.

திருவள்ளூரில், திமுக திருவள்ளூர் மேற்கு மாவட்டம் சார்பில் மொழிப்போர்  தியாகிகள் வீரவணக்க பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற லியோனி அக்கூட்டத்தில் தமிழகத்தின் தற்போது நிலவிவரும் அரசியல் நிலைக்குறித்தும் மேலும் பாஜக வினர் மக்களிடையே பொய் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாக குற்றம் சாட்டி சிறப்புரை நிகழ்த்தினார்.

அதனைத்தொடர்ந்து அவ்விழாவின் நிறைவில் செய்தியாளர்களுடன் உரை நிகழ்த்திய திண்டுக்கல் லியோனி, தெரிவிக்கும் போது,  அயோத்தியில் அரைக்குறையாக கட்டி முடிக்கப்பட்ட ராமர் கோயிலை தேர்தலுக்காக மக்களை திசைத் திருப்பும் நோக்கத்துடன், திறந்து வைத்து ராமருக்கு துரோகம் செய்தது மட்டுமின்றி இந்தியாவில் உள்ள அனைத்து மக்களுக்கும் அவர் துரோகம் செய்திருப்பதாகவும், மேலும் அரைகுறையாக கட்டித் திறக்கப்பட்டுள்ள கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட ராமரே வேதனையுடன் அமர்ந்து இருப்பதாகவும் அப்போது தெரிவித்தார்.  .

மேலும் எதிர்வரும் 2024 பாராளுமன்ற தேர்தலில் இந்திய அணி வெற்றிப்பெற்று பத்தாண்டு மக்களின் வேதனைகள் எல்லாம் அமையயிருக்கும் மதச்சார்பற்ற கட்சிகளின் ஆட்சியில் தீரும் என்றார்.

ஆளுநர் ஆர்.என்  ரவி வரலாற்றுக்கு புறம்பான பல விஷயங்களை பேசி வருவதாகவும், வள்ளலாரை சனாதனத்திற்கு உச்ச நட்சத்திரம் எனவும் உண்மைக்கு புறம்பான கருத்தை கூறுகிறார். அது போன்று பல்வேறு விசயங்களை கூறிக்கொண்டு தமிழ்நாட்டு மக்களை ஆளுநர் திசை திருப்பி குழப்பி வருவதாகவும் குற்றம் சாட்டினார்.

அதற்கும் மேலாக ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜல்லிக்கட்டை சனாதன விளையாட்டு என ஒரு விளையாட்டுத் தனமான செய்தியை தெரிவித்துள்ளார்.

பாஜகவினர் இதுபோன்று வரலாற்றை திரித்து கலாச்சாரத் திருட்டை செய்கின்றனர். மேலும் அவர்கள் தொடர்ந்து தமிழ்நாட்டு மக்களை திசை திருப்பும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டு வருவதாகவும் அது ஒருபோதும் தமிழ்நாட்டு மக்களிடம் பலிக்காது எனவும் தெரிவத்தார்.

பேட்டி

திண்டுக்கல் லியோனி

தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here