தலைமைச்செயலகத்தில் இன்று நடந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் முன்னிலையிலான தமிழ்நாட்டில் முதன்முறையாக போயிங் விமானத்திற்கு முக்கிய பாகங்களை தயாரித்து வழங்கும் ஒப்ந்தம் கையெழுத்தானது.

சென்னை , செப். 27 –

தமிழ்நாட்டில் முதன் முறையாக போயிங் விமானத்திற்கு முக்கிய பாகங்களை தயாரித்து வழங்கும் ஒப்ந்தம் சேலத்தில் உள்ள ஏரோஸ்பேஸ் இன்ஜினியர்ஸ் பிரைவேட் லிமிடெட்டுக்கான ஒப்பந்த உத்தரவை போயிங் இந்தியா நிறுவனத்தின் விநியோக மேலாண்மை இயக்குநர் அஸ்வினி பாரகவா வழங்க ஏரோஸபேஸ் இன்ஜினியர்ஸ் பி லிமிடெட் நிர்வனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் ஆர் சுந்தரம் பெற்றுக் கொண்டனர்.

இந் நிறுவனத்திற்கு உலகளாவிய விண்வெளி நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கான முக்கிய விமான பாகங்கள் நயாரித்து வழங்குவதற்கு நீண்ட கால ஒப்பந்த த்தை போயிங் இந்தியா நிறுவனத்திடமிருந்து பெற்றுவுள்ளது.

 இந்த ஒப்பந்தும் தமிழ்நாட்டில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் தரம் துல்லியம் மற்றும் கூட்டு கலாச்சாரத்தின் அர்பணிப்புக்கான சான்றாக கருதப்படுகிறது. மேலும் இவ்விரு நிறுவனத்திற்கிடையான ஒத்துழைப்பு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக பார்க்கப் படுகிறது. இது சேலம் மற்றும் ஓசூர் உள்ளிட்ட தமிழ்நாடு பாதுகாப்பு தொழில் வழித்தடத்திலுள்ள வளர்ந்து வரும் விண்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில்களுக்கு ஒரு உத் வேகத்தை அளிக்கும் எனக் கருதப்படுகிறது.

இந்நிறுவனம் 1988 ல் குறுந்தொழில் நிறுவனமாக தொடங்கப்பட்டு தற்போது நடுத்தர நிறுவனமாக வளர்சி அடைந்துள்ளது. மேலும் இது மூன்று சகாப்தங்களுக்கு மேலாக ஏரோஸ்பேஸ் இன்ஜினியர்ஸ் பி லிமிடெட் நிறுவனம் விண்வெளி மற்றும் பாதுகாப்பு துறையில் வாடிக்கையாளர்களுக்கு உயர் துல்லியம் மற்றும் உயர்தர பாகங்களை தயாரித்து வழங்குகிறது. இந்நிறுவனம் பல தொழில் நுட்ப ரீதியாக மேம்பட்ட உற்பத்திறன்கள், செயல்முறைகள் தனித்துவமான சோதனை வசதிகள் மற்றும் பல விமான தகதி சார்ந்த மற்றும் தரச்சான்றிதழ்களைக் கொண்டுவுள்ளது.

மேலும் இந்நிறுவனம் அடுத்த 24 மாதங்களில் ஓசூரில் ரூ. 150 கோடி முதலீட்டில் 1,25,00 சதுர அடி ப,ப்பளவு கொண்ட கட்டிடத் தளத்தில் சிவில் ஏரோஸ்பேஸ் உற்பத்திக்காக ஏற்படுத்த இருக்கும் ஒரு புதிய உற்பத்தி வசதியையும் தற்போது சேலத்தில் அமைந்துள்ள உற்பத்திக் கூடத்தை 50 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் விரிவுப் படுத்தவும் திட்டமிட்டுள்ளது. இந்த கூடுதல் வசதி 100 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் எனவும் சொல்லப்படுகிறது.

இந்த சாதனை தமிழ்நாடு முதலமைச்சரின் மேட் இன் தமிழ்நாடு என்பதின் ஒரு படியாக அமையும்.

இந்நிகழ்வின் போது ஊரகத்தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை செயலாளர் வி. அருண்ராய் மற்றும் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here